உங்களால் இயன்றதை சுமந்து செல்லுங்கள் !
25 ஆண்டுகளுக்கு முன்பு, நான் TRF-இல் (The Rotary Foundation) 100 டாலர் தொகையுடன் கணக்கைத் தொடங்கியபோது, இது மிகச் சிறிய தொகை. இதனால் என்ன பயன் இருக்கப்போகிறது என்று நினைத்தது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால், நான் தவறு செய்திருந்தேன். அந்த முதல் காசோலையின் அளவு முக்கியமல்ல. மாறாக, ஆண்டுதோறும் நான் தொடர்ந்து அதில் பங்களித்து வந்ததுதான் முக்கியமானது. இன்று அந்த கணக்கில் 475,000 டாலர்கள் உள்ளன.
ஒரு குறிப்பிட்ட தொகையை ‘கௌரவமான தொகை’ என்று கருதி, அதை வழங்கும் நிலையை அடையும் வரை காத்திருக்காதீர்கள். உங்களால் இயன்ற, வசதியான தொகையை வழங்குங்கள். இந்த நல்ல பழக்கம் உங்களுடன் இணைந்து வளரட்டும்.

போலியோ ஒழிப்புப் பணி, 1979-இல் பிலிப்பைன்ஸில் ஒரு சிறிய தடுப்பூசித் திட்டத்துடன் ரோட்டரி இந்த இலக்கை முன்னெடுத்தது. இன்று 47 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று உலகம் முழுவதும் போலியோ பாதிப்புகளை 99 சதவீதத்திற்கும் மேலாகக் குறைக்க நாங்கள் உதவியுள்ளோம். இன்று, நாம் இலக்கை அடைவதற்கு மிக அருகில் இருக்கிறோம். ஒரு பாலம் எப்படி ஒவ்வொரு சிறு பங்களிப்பாகக் கட்டப்பட்டதோ, அதேபோலத்தான் இந்த இறுதிப் பயணமும் அமையும்.
எங்கோ ஒரு இடத்தில், போலியோ, கல்வியறிவின்மை, நோய்கள் மற்றும் மக்களின் தேவைகளுக்கும் அவர்களுக்குக் கிடைக்கும் வசதிகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க ஒரு பாலம் கட்டப்பட்டு வருகிறது. உங்களால் ஒரு பெரிய பாறையைச் சுமந்து செல்ல முடியாமல் இருக்கலாம்; ஆனால், உங்களால் இயன்றதைச் சுமந்து செல்லுங்கள். தொடர்ந்து பங்களித்துக்கொண்டே இருங்கள்!
எம். முருகானந்தம், ரோட்டரி இண்டர் நேஷனல் துணைத்தலைவர்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.