திருச்சியில் உதயநிதி பேனர் கிழிப்பு

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சியில் உதயநிதி பேனர் கிழிப்பு

விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சார பயணம் திருச்சியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்காக திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞரணி செயலாளர் உதயநிதியை  வரவேற்று பதாகைகளை கட்சியினர் வைத்திருந்தனர். ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி எட்டரை ஊராட்சி பகுதியில் திமுக பிரதிநிதி தங்கதுரை உதயநிதியை வரவேற்று பிளக்ஸ் பேனர் வைத்திருந்தார்.  நள்ளிரவில் உதயநிதி ஸ்டாலின் பேனர் கிழித்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த திமுகவினர் உடன் திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

புகாரில் திருச்சி மாவட்டம், திருவரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திராவிட முன்னேற்ற கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மக்களை சந்திக்க வருவதையொட்டி எங்களது எட்டரை ஊராட்சியில் தி.மு.க. சார்பாக பதாகை வைத்திருந்தோம் இதனை பிடிக்காத சமூக விரோதிகள் சிலர் வேண்டுமென்றே பதாகைகளை கிழித்துள்ளார்கள். இது சில எதிர்கட்சிகளின் விசமத்தனமாக இருக்குமோ என்று அஞ்சுகிறோம். சட்டமன்றத் தேர்தல் வருகின்ற நேரத்தில் இப்போதே அராஜக போக்கு நடைபெறுவதால், ஜனநாயக நாட்டில் வாழ்வதே பெரும் அச்சுறுத்தலாக உ்ள்ளதாக கருதுகின்றோம். மேலும் இது தொடரும் பட்சத்தில் சட்டமன்ற தேர்தலின் போது நாங்கள் பணி செய்ய முடியாமல் எங்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுவதாக அஞ்சுகிறோம்.

ஆகவே எங்களது பதாகையை கிழித்த சமூக விரோதிகளோ அல்லது எதிர்கட்சியினரோ யாராக இருந்தாலும் அவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்து எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பை வழங்கமாறு கேட்டுக்கொள்கிறேன் என திமுக பிரமுகர் தங்கதுரை புகார் அளித்துள்ளது எட்டரை ஊராட்சி பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.