ஸ்ரீரங்கம் அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும்

0

ஸ்ரீரங்கம் அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரை செய்து வருகிறார். திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு பொதுக்கூட்டத்தில் பேசுகையில் “மறைந்த முதல்வர் ஜெயலலிதா வென்ற தொகுதி ஸ்ரீரங்கம். அவர் மறைந்தாலும் அவர் செய்த சாதனைகளால் அவரது புகழ் நிலைத்து நிற்கிறது. அவர் முதல்வராக இந்தத் தொகுதி உறுதுணையாக இருந்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தொகுதியில் முதல்வராக நான் நின்று பேச வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி.

ரூ.100 கோடியில் கொள்ளிடம் புதிய பாலம், திருவானைக்காவல் மேம்பாலம், வண்ணத்துப்பூச்சி பூங்கா, தேசிய சட்டப் பல்கலைக்கழகம், தோட்டக்கலைக் கல்லூரி, ஸ்ரீரங்கம் வரும் பக்தர்கள் தங்குவதற்காக யாத்திரி நிவாஸ், குடிசை மாற்று வாரியம் மூலம் 400 வீடுகள், ரூ.2,000 கோடியில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் உட்பட ஸ்ரீரங்கம் தொகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை முதல்வராக இருந்தபோது ஜெயலலிதா செயல்படுத்தினார்.

முக்கொம்பில் உடைந்த கொள்ளிடம் கதவணைக்குப் பதிலாக புதிய கதவணை கட்டும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் 3, 4 மாதங்களில் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தை அமைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார் ஜெயலலிதா. தற்போது அந்த ஆலையை
ரூ.2,000 கோடியில் தமிழ்நாடு அரசு விரிவுபடுத்ததி வருகிறது.

வளமான, செழிப்பான, அனைத்து அடிப்படைத் தேவைகளும் நிறைந்த பகுதியாக ஸ்ரீரங்கம் தொகுதியை மறைந்த முதல்வர் ஜெயலலிதா உருவாக்கித் தந்தார். மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி நடைபெற வேண்டுமெனில் சட்டப்பேரவையில் அதிமுகவுக்கு பெரும்பான்மை வேண்டும். 2021 சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதி ஜெயலலிதாவின் கோட்டையாக நீடிக்க எதிர்வரும் தேர்தலிலும் பொதுமக்கள் இரட்டை இலை சின்னத்துக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும். ஸ்ரீரங்கம் அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும் என்றார். அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, தங்கமணி, விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், சேவூர் ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர்கள் பரஞ்சோதி, கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்ட அதிமுகவின் முன்னணி தலைவர்கள் உள்பட கொட்டும் மழையில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் முதல்வரின் தேர்தல் பரப்புரையில் கலந்துக்கொண்டனர்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.