திருச்சி பள்ளியில் மது விற்பனை ஜோர்.. சிக்கிய அதிமுக பிரமுகர்…
திருச்சி பள்ளியில் மது விற்பனை ஜோர்.. சிக்கிய அதிமுக பிரமுகர்…
திருச்சி அருகே ஆரம்ப சுகாதார பள்ளியில் மது பாட்டில்கள் வியாபாரம் செய்துவந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் முசிறி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு அரசு பள்ளி அங்கன்வாடியில் மது பாட்டில்கள் வைத்து விற்பனை நடந்து வருவதாக மதுவிலக்கு தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முசிறி காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான தனிப்படையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு அங்கன்வாடிகுள் பெட்டி பெட்டியாக மது பாட்டில்கள் இருப்பதை கண்டறிந்து போலீசார் கைப்பற்றினர்.
மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டபோது முசிறி டவுனில் மதுபான பார் நடத்திவரும் அதிமுக பிரமுகர் செல்லதுரை தான் இதுபோன்ற சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டது என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் போலீசார் சம்பவத்தன்று செல்லதுரையை கைது செய்யாமல் விட்டுவிட்டனர்.. இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைக்க சம்பந்தப்பட்ட நபரை உடனே கைது செய்ய வேண்டி உத்தரவிட்டதன் அடிப்படையில் மறுநாளே இன்ஸ்பெக்டர் கருணாகரன் செல்லதுரை மீது வழக்கு பதிந்து கைது செய்துள்ளார்.
இந்நிலையில் ஒரு அரசு பள்ளிக்குள் எப்படி மது பாட்டில்கள் சென்றது… யார் துணையோடு இதெல்லாம் நடைபெற்றது என்று பார்த்தாள் செல்லதுரை அவரது மனைவி கவிதா குழந்தைகள் படிக்கும் ஆரம்ப சுகாதார பள்ளி அங்கன்வாடியில் வேலை பார்த்து வருவதும், அதன்மூலம் செல்லதுரை தான் பதுக்குவதற்கு ஏற்ற இடமாக பள்ளி வளாகத்தை பயன்படுத்திக் கொண்டுள்ளார், என்பது தெரியவந்தது.. இருப்பினும் அவர் மனைவி மீது எந்தவித நடவடிக்கையும் போலீசார் மேற்கொள்ளவில்லை எனத் தெரிய வருகிறது.
இந்நிலையில் போலீசார் தரப்பில் இருந்து கைது செய்யப்பட்ட செல்லதுரை தனது வீட்டிற்கு பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததாக கூறி வழக்கு பதிந்துள்ளனர்.
இவ்வழக்கில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்தது தவறு என்ற போதிலும் சம்பவ இடத்தை போலீசார் மாற்றி பதிவு செய்தது எதற்காக..? சம்பந்தப்பட்ட செல்லதுரை மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடி உத்தரவிட்ட பிறகு இன்ஸ்பெக்டர் கருணாகரன் சம்பவத்தன்று கைது செய்யவேண்டிய நபரை மறுநாள் செய்ததற்கான காரணம் என்ன? என்று சமூக ஆர்வலர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்…
இதுதொடர்பாக முசிறி இன்ஸ்பெக்டர் தரப்பை கேட்க முயற்சித்தபோது அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை.
–ஜித்தன்