உதயநிதி ஸ்டாலினை எதிர்க்க தயாரான நடிகர் விஜய்-தேர்தல் பரபரப்பு!
உதயநிதி ஸ்டாலினை எதிர்க்க தயாரான நடிகர் விஜய் – தேர்தல் பரபரப்பு!
பிரபல நடிகர்கள் அரசியலுக்கு வருவார்களா மாட்டார்களா என்ற பேச்சே, தமிழ்நாட்டின் முக்கிய அரசியல்களில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
இப்படி ஒவ்வொரு தேர்தல் நேரங்களிலும் நடிகர்களின் அரசியல் குறித்த பேச்சு சர்வசாதாரணம் தான் என்றாலும், நடிகர் விஜயினுடைய தற்போதைய நடவடிக்கைகள் விஜய் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் சார்ந்து நகர்த்தி வருவதை உறுதி செய்வதாக உள்ளது.
நடிகர் விஜய் கலைஞர் முதல்வராக இருந்தபோது அரசியலுக்கு வருவார் என்று பேசப்பட்டது, ஆனால் அப்போது அவர் தவிர்த்துவிட்டார். பிறகு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது ‘தலைவா’ படப் பிரச்சினையின் போது நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்களால் கூறப்பட்டது, பிறகு அதுவும் நிறைவேறாமல் முதல்வராகபோனது.
இந்த நிலையில் தமிழக உள்ள மு.க. ஸ்டாலின் இருக்கும் சமயத்தில் தன்னுடைய அரசியல் நகர்வுகளை சிறிது சிறிதாக முன்னெடுத்து வருகிறார் நடிகர் விஜய். ஆனால் அவருடைய வருகை மு.க. ஸ்டாலினுக்கு எதிரான அரசியல் என்பது கிடையாது என்பதும், அவர் அரசியல் களம் காண விரும்புவது வருங்காலத்தில் என்றும் அதாவது உதயநிதிக்கு எதிரான அரசியலில் கால் பதிப்பார் என்றும் அதற்கான முதல் படியாக தற்போது பணிகளை தொடங்கி இருப்பதாகவும் மக்கள் மன்றத்தின் மேல்மட்ட வட்டாரங்கள் பேசி வருகின்றன.
நடிகர் விஜய் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகன், உதயநிதி ஸ்டாலின் பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் இருந்து வந்து திரைப்பட நடிகராக அறிமுகமாகி தற்போது திமுகவின் இளைஞரணி செயலாளர், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர், கட்சியின் அடுத்த தலைமை என்ற நிலைக்கு சென்று கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் உதயநிதி தலைமை அரசியல் பிரவேசத்தின் போது மாற்று அரசியல் சக்தியாக அதிமுகவிற்கு வலுவான தலைமை இல்லாததாலும், ஏனைய கட்சிகள் எதுவும் தமிழ்நாட்டில் வலுவாக இல்லாத காரணத்தாலும் பலமான எதிர்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.
அதேசமயம் கலைஞரின் காலக்கட்டத்தில் மு. க.ஸ்டாலின் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்ற போது பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தது.
ஆனால் தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையில் அடுத்த தலைமைக்கு உதயநிதி தயாராவதற்கு பெரிய அளவில் எதிர்ப்புகள் கட்சியில் எழவில்லை, இன்னும் சொல்லப்போனால் பலர் உதயநிதியை தற்போதே பெருமளவில் ஆதரிக்க தொடங்கிவிட்டனர்.
அதில் சீனர்களும் சரி, ஜூனியர்களும் சரி உதயநிதியின் தலைமையை ஏற்க தயாராக உள்ளனர்…
இவ்வாறு திமுக தனது அடுத்த தலைமையை தேர்வு செய்து விட்டதாகவே கருதப்படுகிறது.
இவ்வாறு அதிமுகவில் தற்போது கூட வலுவான தலைமை இல்லை, மேலும் மற்ற கட்சிகளும் தமிழ் நாட்டில் மிகப்பெரிய அரசியல் அதிகாரம் பெறவில்லை, இன்னும் சில வருடம் கழித்து திமுக மட்டும்தான் வலுவான அரசியல் இயக்கமாக இருக்கும் சமயத்தில் இரண்டாவது வாய்ப்பு யார் என்ற கேள்வி எழும் இந்த நேரத்தில் நடிகர் விஜய் வருங்காலத்தை எண்ணி தற்போதே தனது அரசியல் நகர்வை சிறிது சிறிதாக தொடங்கி வருகிறார் என்று விஜயின் முக்கிய விசுவாசி ஒருவர் கூறினார்.
அதேசமயம் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக விஜயின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயரையும் பதிவு செய்தார்.
இதில் தந்தைக்கும் மகனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது அது தனது பெயரையும் தனது இயக்கத்தின் பெயரையும் தனது தாய், தந்தை இருவரும் அரசியலுக்காக பயன்படுத்த கூடாது என்று நீதிமன்றம் செல்லும் அளவிற்கு நடிகர் விஜயின் குடும்ப விவகாரம் சென்றிருக்கிறது.
அதே நேரத்தில் எஸ் ஏ சந்திரசேகரின் ஆதரவாளராக இருந்த பல முக்கிய நபர்கள் விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் புதிய நிர்வாகிகள் அனைவரையும் புஸ்ஸி ஆனந்தே வழி நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் புஸ்ஸி ஆனந்த் தமிழ்நாடு முழுவதும் திடீர் விசிட் செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக கடந்த சில நாட்களுக்கு முன் திருச்சிக்கு வருகைதந்த புஸ்ஸி ஆனந்துக்கு திருச்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மிகப்பெரிய வரவேற்பு அளித்தனர். அதே நேரத்தில் எதிர்ப்பும் போராட்டம் ஆர்பாட்டம் போஸ்டர் என்று கடுமையாகவும் இருந்தது.
இந்த நிலையில் தற்போது நடைபெற உள்ள ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் போட்டியிட விரும்புவதாக தலைமையிடம் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூறியிருந்தனர்.
இதற்கான ஆலோசனை கூட்டம் செப்டம்பர் 18 சென்னையில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் புஸ்ஸி ஆனந்த் பேசுகையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட விரும்பும் பட்சத்தில் போட்டியிடலாம், அதுவும் எந்த கட்சியிலும் சேராமல் சுயேட்சையாக போட்டியிட வேண்டும் என்று கூறியிருக்கிறாராம். மேலும் 9 மாவட்டங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து தேர்தல் பணியை தீவிரமாக செய்யுங்கள் என்று நிர்வாகிகளை அரசியலுக்கு தயார் செய்துள்ளார் புஸ்ஸி ஆனந்த் என்று கூறப்படுகிறது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள்இயக்க தேர்தல் பொறுப்பாளர்கள் உத்தேசிக பட்டியல்:
என்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளால் பரப்பப்பட்டு வருகிறது.
1-வேலூர்:வேல்முருகன், (வேலூர்), கரிகாலன்(திருச்சி), சிவா(தருமபுரி)
2-ராணிப்பேட்டை: மோகன், (ராணிப்பேட்டை), செந்தில்.(திருச்சி), லத்தீப்.(திருச்சி)
3-திருப்பத்தூர் :ராஜசேகர்,(கடலூர்), சீனு(கடலூர்),
4-காஞ்சிபுரம்:தென்னரசு,(காஞ்சிபுரம்), விஜய்சரவணன் (தஞ்சாவூர்), சிவா(அரியலூர்)
5-செங்கல்பட்டு: விஜயகுமார்.(திருவள்ளூர்), சுகுமார் (நாகை), சதீஷ்(நாமக்கல்)
6-விழுப்புரம்:பரணிபாலாஜி,(விமுப்புரம்), பாபு,(கோவை), பாலு (திருப்பூர்)
7-கள்ளகுறிச்சி: பர்வேஸ்(புதுக்கோட்டை),செந்தில்(ராசிபுரம்), விஜய்(விருத்தாசலம்)
8-நெல்லை:தங்கபாண்டி(மதுரை),லெப்ட்பாண்டி(தேனி), சம்பத்(கோவை)
9-தென்காசி:சஜி.(திருநெல்வேலி), வடிவேலு.(கிருஷ்ணகிரி), வசந்த்(.தஞ்சாவூர்)மேலும் நடிகர் சீமான் போன்றவர்கள் நேற்று பேட்டி அளிக்கும் போது தம்பி விஜய் அரசியலுக்கு வருவதை ஆதரிப்பதாகவும், அவருக்கு வாக்களித்தால் வாழ்த்துக்கள் எனக்கு வாக்களித்த நன்றி என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் விஜய்யிடம் உள்ள குறைகளை அவரிடம் எடுத்துச் சொல்லி இருப்பதாகவும் அதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் கூறுகின்றார்.
இப்படி திடீரென்று நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் அரசியல் நகர்வு உறுதி செய்யப்பட்டு சில மாவட்டங்களில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றனர்.
மேலும் அவர்கள் விஜய்யின் புகைப்படத்தை பயன்படுத்தியும், விஜய் மக்கள் இயக்கம் என்று எழுதியும் தேர்தல் பிரச்சார விளம்பரங்களை செய்ய தொடங்கிவிட்டனர்.
இந்த செயல்பாடுகள் விஜய்யின் வருங்கால அரசியலை உறுதி செய்வதாக இருப்பதாக திரையுலக வட்டாரங்கள், அரசியல் வட்டாரங்கள் பேசப்படுகிறது.
குறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகி ஒருவரிடம் கேட்கும்போது அண்ணன் தற்போது விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் போட்டியிட அறிவித்திருக்கிறார்.
இது வழக்கமான நிகழ்வுதான் என்றாலும் கடந்த கால தேர்தல்களை போல் அல்லாமல் இது அண்ணனின் தேர்தல் வருகையை உறுதி செய்வது போல் தோன்றுகிறது.
அதன் வெளிப்பாடாக மாநிலம் முழுவதும் இருக்கக்கூடிய நிர்வாகிகள் தீவிரமாக ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றனர். அண்ணன் இப்போது இல்லாட்டிலும் இன்னும் சில வருடங்களில் அரசியலுக்கு வருவது உறுதி தான் என்று கூறினார்.