அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பிரபல ரவுடிக்கு திருச்சி சிறையில் உதவிய காவலர்கள் இடமாற்றம் – பரபரப்பு தகவல் – அங்குசம் exclusive !

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

சமீபத்தில் கோவை மத்திய சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்ட கைதி மதுரையை சேர்ந்த வெள்ளகாளி என்ற காளி, இவர் திருச்சி மத்திய சிறையில் உயர் பாதுகாப்பு தொகுதி -1 அடைக்கப்பட்டுள்ளார். இவர் மதுரை சிறையில் இருந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக புதிய மதுரை சிறையில் அடைக்கப்பட்டார், அங்கிருந்து தற்போது திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டு அடைக்கப்பட்டுள்ளார்.

திருச்சி மத்திய சிறை

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

இப்படி இருந்தும் காளி தனது கோஸ்ட்டிகளை சேர்ந்த நபர்களுக்கு போன் மூலமாக தகவல் கொடுத்து வந்துள்ளார், இவ்வாறு சிறையில் இருந்து தகவல் பரிமாற்றம் வெளியில் உள்ள கூலி படைகளுக்கு போன் மூலமாக சென்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு சிறைக்குள் கஞ்சா, கார்ன்ஸ் போன்ற பொருட்கள் சப்ளை செய்ததும் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து சிறைத்துறை தலைமை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் அடிப்படையில் குழு அமைக்கப்பட்டு திருச்சி மத்திய சிறை காவலர்கள் மூன்று பேர் சிறை உளவு விழிப்பு பிரிவு போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளார்கள்.

யாவரும் கேளீர்

பிரசாத்

இப்படி திருச்சி மத்திய சிறையில் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததாக ஜெய குரு (இரண்டாம் நிலை காவலர்) என்பவர் பெரம்பலூர் கிளைச்சிறைக்கும். பிரசாத் (இரண்டாம் நிலை காவலர்) என்பவர் துறையூர் கிளை சிறைக்கும், அழகு முத்து( இரண்டாம் நிலை காவலர் )என்பவர் பாபநாசம் கிளைச்சிறைக்கும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இனிகோ இருதயராஜ் பிறந்தநாள்

மேலும் இவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க அடுத்த கட்ட விசாரணை நடந்துகொண்டு இருப்பதாக தற்போது தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

மேலும் இசையமைப்பாளர் பெயர் கொண்ட ஒருவரும்,  பாம்பு சாமியின் பெயரை கொண்ட  ஆகிய இரண்டு காவலர்களும் உடந்தையாக செயல்பட்டது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் சென்னை புழல் சிறைக்கு மாற்று பணிக்கு சென்று இருப்பதால் அவர்கள் திருச்சி சிறைக்கு பணிக்கு வந்த உடன் அவர்களுக்கென தனி விசாரணைக் காத்திருக்கிறதாம்.

அதுமட்டுமல்லாது இந்த இரண்டு காவலர்களும் வெள்ளைக்காளி வழக்கில் சார்ந்த லோடு முருகன் என்பவருக்கு தகவல் கொடுப்ப தற்காக சென்னை மத்திய சிறைக்கு சென்று இருக்கலாம் என்று அதிகாரிகள் தங்கள் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர்.

ஜெய குரு
ஜெய குரு

குற்றங்களை தடுப்பதற்காக சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு, குற்றங்களுக்கு உடந்தையாக சிறைக் காவலர்களை இருந்திருப்பது திருச்சி மத்திய சிறை துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இதுகுறித்து உயர் அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரவுடி காளி

அதுமட்டுமில்லாது ரவுடி காளி பற்றி பல்வேறு புகார்கள் சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு செல்ல சிசிடிவி காட்சி வழியாக ரவுடி காளியை கண்காணித்து இருக்கின்றனர், அப்போது சிசிடிவி காட்சி செல்போன் பயன்படுத்தியது தெரியவர பிறகு சிறைத்துறை ஐஜி ஆய்வு செய்ததில் காவலர்கள் உதவியது தெரியவந்திருக்கிறது. அந்த நேரத்தில் ரவுடிக்கு உதவிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க இடையூறாக இருந்த திருச்சி சிறை துறை உயர் அதிகாரியின் அழுத்தத்தை மீறி தற்போது சென்னை அதிகாரி காவலர்களை இடமாற்றம் செய்து உத்தரவிட்டு இருக்கிறாராம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.