சிறையில் அமைச்சர்கள் ஆய்வு ! ஏமாற்றத்தில் முடிந்த உள்குத்து சபதம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சிறையில் அமைச்சர்கள் ஆய்வு ! ஏமாற்றத்தில் முடிந்த உள்குத்து சபதம் !

திருச்சி மத்திய சிறைச்சாலையில் இன்று 17/10/2021 காலை 7.40 மணி அளவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

ஆய்வு செய்த பின்பு சரியாக 8.45 மணி அளவில் செய்தியாளர்களை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சந்தித்து பேசினார்.

அதில் 1517 தண்டனை பெற்ற சிறைவாசிகள் இங்கு உள்ளனர் – ஐ.டி தொழிற்பயிற்சி இந்தியாவிலேயே இரண்டு சிறைச்சாலைகளில் மட்டும்தான் உள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

ஒன்று ராஜஸ்தான் ஜெய்ப்பூர், அடுத்தபடியாக திருச்சி சிறைச்சாலை,

இங்கு படித்து செல்வோர்களுக்கு ஐ.சி சான்றிதழ் வழங்கப்படுகிறது.

அதே போல் சிறைவாசிகள் 10,12 போன்ற வகுப்புகள் தேர்வெழுத அனுமதிக்கப்படுகின்றனர்.

ஏழு பேரில் ரவிசந்திரன் என்பவரது தாயார் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பரோல் வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வேண்டுகோள்

இது குறித்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலினிடம் கலந்து பேசி பரிசீலனை செய்யப்படும்.

சிறையில் உள்ள கைதிகளுக்கு முழுமையான மருத்துவ வசதிகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

சிறை கைதிகளின் பாதுகாப்பில் அக்கறை உள்ள அரசாக இந்த அரசு உள்ளது.

திருச்சி சிறப்பு முகாமில் தண்டனை காலம் முடிந்தும் தங்க வைக்கப்பட்டுள்ள கைதிகள் விடுதலை குறித்து

பாஸ்போர்ட்,வெளி நாடுகளுக்கு சென்றால் அவர்களின் உயிருக்கு ஆபத்து இருக்கும் இங்கே இருக்கிறது இது போன்ற காரணங்களால் தான் அவர்கள் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

10 ஆண்டுகள் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ளவர்களை விடுவிப்பதற்கு அறிவித்துளார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

முதல்வர் ஆனால் வெடிகுண்டு வழக்கு, தேச துரோக வழக்கு, கொடும் குற்றம் இப்படி அதில் பல்வேறு நிபந்தனைகள் உள்ளது,

இது போன்றவர்களை ஆய்வு செய்து வருகிறோம்,இது போன்றவர்களை களைத்து விட்டு பட்டியலை தயாரித்து வருகிறோம். என்று கூறினார்.

இந்நிலையில் திடீரென அமைச்சர்கள் ஆய்வுக்கு காரணம் என்ன என்று தெரியாமல் சிறைத்துறை குழப்பத்தில் இருந்து வருகிறார்களாம்.

குழப்பத்திற்கான காரணம் சட்டத்துறை அமைச்சருடன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும் வந்ததுதான்

அதன்பின்பு தான் உளவுத்துறை அளித்த துப்புகளின் அடிப்படையில், சில உள்குத்து வெளியே தெரிந்துள்ளது.

நேற்று 16/10/2021 திருச்சி மாவட்டத்தில் டாப் செய்தியாக பேசப்பட்டது திமுக மாஜி ஒன்றிய செயலாளர் நவல்பட்டு விஜி கைது செய்யப்பட்டது.

இவர் கடந்த மாதம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியை பற்றி சமூக வலைத்தளங்களில் தவறுதலாக பேசி பதி விட்டதன் காரணமாக நேற்று திடீரென காவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின் அடிப்படையில் நவல்பட்டு விஜி வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் போலீசார் நவல்பட்டு விஜி மீது வழக்குப் பதிந்து மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்துவதற்கு இரவு கொண்டு செல்லும் வழியில் திடீரென ரத்த அழுத்தம் அதிகரித்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் விஜியை பரிசோதித்துப் பார்த்தபோது ரத்த அழுத்தம் 190 ஆக இருந்ததை அடுத்து கண்டிப்பாக சிகிச்சை பெறவேண்டுமென்று கூறியதால், போலீசார் வேறுவழியின்றி ஒப்புதல் அளித்தனர்.

ஒரு பக்கம் நான்கு நாள் விடுமுறை என்பதால் ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இருக்காது கண்டிப்பாக சிறைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்த நிலையில் திடிரன உடல்நல குறைவென்று அனுமதிக்கப்பட்ட விஜி கிட்டத்தட்ட தப்பித்த தாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் இன்று JM 2 நீதிமன்றத்தில் நீதிபதி திரிவேணி மதியம் 2 மணி அளவில்  நீதிமன்ற ஜாமினில் நவல்பட்டு விஜியை விடுதலை செய்துள்ளார்.

அதன்பின் சிகிச்சை பெற்று வந்த விஜி சிகிச்சை பெறாமல் வீட்டிற்கு ஆள விட்டா போதும்டா என்ற அளவுக்கு கிளம்பி சென்றுவிட்டார்.

அதன் பின்புதான் அதிகாரிகளுக்கு புரிந்துள்ளது அமைச்சர்களின் திடீர் விசிட் எதற்காக என்று.

இந்த பேச்சு சிறைத்துறை மட்டுமல்லாது, சிறைத்துறைகுள்ளேயே பார்க்கப் போயிட்டாருயா என்று கட்சி நிர்வாகிகள் இடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

-இந்திரஜித்

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.