பாமகவில் நடக்கும் அதிரடி மாற்றம் ! அன்புமணியை முதல்வராக்க ராமதாஸ் வகுக்கும் வியூகம் !
பாமக நிறுவனர் ராமதாஸின் மகன் அன்புமணி ராமதாஸ் பாமக இளைஞரணி செயலாளராக உள்ளார். மேலும் மாநிலங்களவை உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக களமிறங்கி பாமக தனித்துப் போட்டியிட்டது. ஆனால் அந்தத் தேர்தலில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது பாமக, ஆனாலும் குறிப்பிடத்தக்க அளவிற்கு வாக்குகளைப் பெற்று இருந்தது.
இந்த நிலையில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தே 4 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது பாமக, ஆனால் அதற்கு பிறகு அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய காணப்படுகிறது. நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது.
இவை அனைத்திற்கும் காரணம், இத்தனை ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் தனித்து வெல்ல முடியாத நிலையில் பாமக இருப்பதை ராமதாஸ் பின்னடைவாகக் கருத தொடங்கி விட்டாராம். மேலும் வரக்கூடிய 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆவது பாமகவை மிகப் பெரிய அரசியல் கட்சியாக உருவாக்க வேண்டும். முதல்வர் பதவிக்கு அன்புமணி ராமதாசை கொண்டு வர வேண்டும் என்று எண்ணி இதற்கான பணியில் தற்போதே களமிறங்கி விட்டாராம் ராமதாஸ்.
இதற்காக கட்சியிலும் மக்கள் மத்தியிலும் அன்புமணியை முன்னிலைப் படுத்தும் விதமாக. பாமகவின் தலைவர் பொறுப்பு வகிக்க கூடிய ஜிகே மணியின் பதவியைப் பறித்து, அன்புமணிக்கு கொடுக்க திட்டமிட்டு இருக்கிறாராம் ராமதாஸ்.
மேலும் வரக்கூடிய அரசியல் நிகழ்வுளில் கூட்டணியோடு இல்லாமலும் பாமகவை தமிழ்நாட்டில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்று சிந்தித்து செயல்பட்டு வருகிறாராம். இதன் வெளிப்பாடுதான் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற உயர்நிலைக்குழு கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களுக்கு அதிக அதிகாரம் வழங்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறுகின்றனர்.
ராமதாஸ் பாமகவை ஆளும் கட்சியாகவும் அன்புமணியை முதல்வராகவும் திட்டம் தீட்டி செயல்பட்டு வரும் வேலையில் வடக்கு மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் பாமகவிற்கு செல்வாக்கே இல்லை, ஆட்சியை பிடிக்க ராமதாஸ் கனவு காண்பது எப்படி நிறைவேறும் என்று பிற கட்சியினர் கூறுகின்றனர்.