அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திருச்சியில் பிரபல ஓட்டல்கள் உள்பட 27 வணிக நிறுவனங்களுக்கு சீல்

0

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சியில் பிரபல ஓட்டல்கள் உள்பட 27 வணிக நிறுவனங்களுக்கு ‘சீல்’

பொதுமக்கள் அதிகமாக கூடும் கடைகள், ஓட்டல்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களை கட்டும்போது சம்பந்தப்பட்ட நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி நிறுவனங்கள், உள்ளூர் திட்ட குழுமம் ஆகியவற்றில் முறையான அனுமதி பெறப்படவேண்டும்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

 

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

அனுமதி பெறாத நிறுவனங்களின் கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக அறிவிக்கப்படும். பார்க்கிங் வசதி, ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் தப்பித்து செல்வதற்கான இட வசதி இல்லை என்றால் அங்கு வரும் மக்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பாகி விடும். ஸ்ரீரங்கம் திருமண மண்டபத்தில் மணமகன் உள்பட 64 உயிர்களை காவு வாங்கிய தீ விபத்து, கும்பகோணத்தில் பள்ளியில் படிக்க சென்ற இளம் தளிர்களான 91 குழந்தைகள் நொடிப்பொழுதில் தீயில் கருகி உயிரிழந்தது, சென்னை மவுலிவாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் பலர் பலியான சம்பவங்கள் எல்லாம் விதிமுறை மீறல்களால் நடந்ததே ஆகும்.

 

https://www.livyashree.com/

இந்நிலையில் திருச்சியை அடுத்த அல்லூரை சேர்ந்த சீனிவாசன் என்பவர் தனது வழக்கறிஞர்கள் மூலம் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், திருச்சி நகரில் கடைவீதி, தில்லைநகர், மெயின்கார்டு கேட், ஜங்ஷன் உள்ளிட்ட பகுதிகளில் விதி முறைகளை மீறி கட்டப்பட்ட பிரபல ஓட்டல்கள் உள்பட 27 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் மீது மாவட்ட கலெக்டர், மாநகராட்சி மற்றும் உள்ளூர் திட்ட குழும அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும், என கூறப்பட்டு இருந்தது.

 

இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி கே.கே.சசிதரன் திருச்சி மாநகராட்சி ஆணையர், உள்ளூர் திட்ட குழும உதவி இயக்குனர் ஆகியோர் விதிமுறை மீறி கட்டப்பட்ட 27 வணிக நிறுவனங்களையும் மூடி சீல் வைக்க வேண்டும். மாநகர போலீஸ் கமிஷனர் இதற்கான முழு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க வேண்டும். இந்த நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய அறிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஜனவரி 7-ந்தேதி ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு உள்ளார்.பிரபல ஓட்டல்கள், ஜவுளி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட 27 வணிக நிறுவனங்கள் விதிமுறை மீறல் பட்டியலில் இடம் பெற்று இருப்பதால் மதுரை ஐகோர்ட்டு கிளையின் இந்த அதிரடி உத்தரவு திருச்சியில் தொழில் அதிபர்கள், வணிகர்கள் மத்தியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.