திருச்சியில் காதலனை கொன்று விட்டு காதலியை நாசப்படுத்திய சோகம்
திருச்சியில் காதலனை கொன்று விட்டு காதலியை நாசப்படுத்திய சோகம்
திருச்சி மாவட்டம் சிறுகனூரை அடுத்த திண்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் அவரது மகன் தமிழ்வாணன் (23). இவர் அதேப்பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். அதேக்கல்லூரியில் படித்து வந்த திருச்சி மாவட்டம் கோவண்டாகுறிச்சியைச் சேர்ந்த பெண் ஒருவரும் படித்து வந்தார். இருவரும் சில வருடகாலமாக காதலித்துவந்தனர்.
பொங்கல் தினமான நேற்று மாலை இருவரும் சென்னை -திருச்சி பைபாஸ் ரோட்டில் உள்ள மலைமாதா கோவில் பகுதியில் பேசிக்கொண்டிருந்த நிலையில் மாலை 6 மணியளவில் மீண்டும் ஊருக்கு செல்ல மோட்டார் சைக்கிளில் சென்றனர். மீண்டும் குமளூர் பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பேசிக்கொண்டிருந்தனர். அவ்வழியாக 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 மர்மநபர்கள் அந்த பெண்ணிடம் தகாதமுறையில் நடக்க முயன்றனர். அப்போது தமிழ்மாணவன் அவர்களிடம் சண்டை போட்டார். அப்போது ஓருவன் தமிழ்வாணனின் கழுத்தில் கத்தியை குத்தினான். பின்னர் அவர்கள் அந்த பெண்ணை காட்டுப்பகுதிக்கு தூக்கி சென்று கற்பழித்துவிட்டு ஓடிவிட்டனர். இந்த சம்பவத்தில் கல்லூரி மாணவன் தமிழ்மாணவன் இறந்தார்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.