அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஜில்லுன்னு சினிமா (அங்குசம் இதழ் ஜன.25-பிப்.9)

0

திருச்சியில் அடகு நகையை விற்க

ஜில்லுன்னு சினிமா

 

 

இந்த வார JANUARY 15 - 21 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

அந்த 2 பெண்களை உள்ள தள்ளணும்

வி.ஜே.க்களின் ஆசையும், லட்சியமும்

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே’. படத்தின் ஆடியோ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர் இயக்குநர் பேரரசு பேசுகையில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆண்களால் மட்டுமல்ல பெண்களாலும் தான் ஏற்படுகிறது என்று சொல்லத் தோன்றுகிறது.

டிக் டாக் மூலம் நாட்டில் நடக்கும் கொடுமை தாங்க முடியவில்லை. சில கேவலமான பெண்கள் நடந்து கொள்ளும் விதமும் பேசுகிற பேச்சும் சகிக்க முடியவில்லை.

குறிப்பாக இரண்டு பெண்கள் செய்யும் செயல்பாடுகள் மிகவும் அருவருப்பானவை. பார்க்க சகிக்க முடியவில்லை.அவர்களை எல்லாம் பிடித்து உள்ளே தள்ளவேண்டும். அந்த அளவிற்கு அவர்களது செயல்பாடுகள் இருக்கின்றன. இவர்களை விட்டு வைக்கக் கூடாது என்றார்.

 

2. வி.ஜே.வாக இருந்த மகேஸ்வரி

 

சன் மியூசிக் சேனல் மூலம் வி.ஜே.வாக டி.வி ஏரியாவுக்குள் நுழைந்தவர் மகேஸ்வரி. அதன் பின் கலைஞர் குழும சேனலான இசையருவில் சில காலம் வி.ஜே.வாக இருந்த மகேஸ்வரி 2010-ஆம் ஆண்டு ‘குயில்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் எண்ட்ரியானார். அந்தப் படம் ரிலீசாச்சா, ஆகலயான்னு நமக்குத் தெரியாது. ஆனால் அசராத மகேஸ்வரி, விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான ‘தாயுமானவன்’ சீரியல் மூலம் கவனம் பெற்று, அதே விஜய் டி.வி.யின் ‘புதுக்கவிதை’ சீரியலின் மூலம் புகழ் பெற்றார்.

என்ன தான் டிவி ஏரியாவில் பிஸியாக இருந்தாலும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பது மகேஸ்வரியின் தீராத ஆசை. இவரது ஆசைக்கு சப்போர்ட்டாக இருக்கிறார் கணவர் சாணக்யா. மகேஸ்வரியின் தீவிர சினிமா வேட்டையால் கிடைத்த சான்ஸ் தான் சமீபத்தில் ரிலீசான ‘ரைட்டர்’ படம். எல்லா மட்டத்திலும் விமர்சன ரீதியாக நல்ல பேர் எடுத்துள்ள ‘ரைட்டர்’ படத்தில் சமுத்திரக்கனியின் இரண்டாவது மனைவியாக நடித்திருப்பார் மகேஸ்வரி. ”செகண்ட் ஒய்ஃப் கேரக்டர் என்றாலும் பெஸ்ட் கேரக்டர். இனிமே செலக்ஷன் எல்லாமே ஃபர்ஸ்ட் கேரக்டர் தான்” என்ற முடிவுடன் இருக்காராம் மகேஸ்வரி.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

தனுஷின் ‘பவர் பாண்டி’யில் தலைகாட்டிய டி.டி.என்கிற திவ்ய தர்ஷினியும் ”2022-ல கோலிவுட்ல கலக்குறோம், கல்லா கட்றோம்” என்ற லட்சியத்துடன் தனது பி.ஆர்.ஓ.யுவராஜ் மூலம் போட்டோ ஷூட்டுகளை ரிலீஸ் பண்ணி வருகிறார். நீலிமா இசையைத் தெரியாத டி.வி. ரசிகர்கள் இருக்கவே முடியாது. தனது கணவருடன் சேர்ந்து டி.வி.சீரியல்கள் தயாரிப்பதில் மும்முரம் காட்டி வரும் நீலிமா தனக்கு தோதான கேரக்டர்களை செலக்ட் பண்ணி சினிமாவில் நடிக்கிறார். ஒரு பெண் குழந்தைக்குத் தாயான நீலிமா, இப்போது மீண்டும் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். அந்த தாய்மை உணர்வை மனப்பூர்வமாக ரசிக்கும் நீலிமா அதை போட்டோஷூட் நடத்தி புளகாங்கிதம் அடைந்துள்ளார்.

-மதுரையான்

3.

பெண் பி.ஆர்.ஓ. பிடியில் இளம் ஹீரோக்கள்!

தனியார் நிறுவனம் மார்க்கெட்டிங் அதிகாரியாக சென்னையில் வாழ்க்கையைத் துவக்கி, ஆந்திர சினிமாவின் ஹீரோவான டாக்டர் ராஜசேகரின் தம்பியும் சில தமிழ்ப்படங்களில் ஹீரோவாக தலைகாட்டிய செல்வாவின் அட்வைஸ்படி கோலிவுட்டுக்குள் எண்ட்ரியானவர் சுரேஷ் சந்திரா. ஆரம்பத்தில் அஜீத்தின் ரசிகர் மன்றத் தலைவராக இருந்து, அப்புறம் அஜீத்தின் மேனேஜராகி, இப்ப முன்னணி சினிமாக் கம்பெனிகளுக்கும் சில ஹீரோக்களுக்கும் பி.ஆர்.ஓ.வாக பணியாற்றி வருகிறார் சுரேஷ் சந்திரா. திருமணமான இவருக்கு குழந்தை இல்லாததால் பழம்பெரும் டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் மகன் கே.எஸ்.ஜி.வெங்கடேஷின் பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தார் சுரேஷ் சந்திரா. அந்தக் குழந்தையின் பெயர் ரேகா.

இப்படி வெறுமனே ரேகான்னு சொன்னா சினிமா ஏரியாவுல யாருக்கும் தெரியாது. ரேகா ‘டி ஒன்’ அப்படின்னு சொன்னா சட்டுன்னு புரியும். பிரபல தயாரிப்பாளர் எல்ரெட் குமாரின் சினிமா கம்பெனியிலும் சில பி.ஆர்.ஓ.க்களிடமும் உதவியாளராக வேலை பார்த்த மணிகண்டன் என்பவர் தான் ரேகாவின் கணவர். மணிகண்டனுடன் திருமணம் ஆனாலும் தனது அப்பாவுக்கு உதவியாக இப்போதும் சுறுசுறுப்பாக பணியாற்றும் ரேகாவிடம் சில இளம் ஹீரோக்கள் மாட்டிக் கொண்டு படாதபடுவதோடு தயாரிப்பாளர்களையும் பாடாய்படுத்துகிறார்கள்.

ஹரிஷ் கல்யாண், அதர்வா போன்ற சில முகம் தெரிந்த ஹீரோக்களும் முதல் படத்தின் பூஜையின் போதே மண்டைக்கர்வமாக பேசி மண்டைவீங்கி ஹீரோ(??) அஸ்வின் போன்றவர்களும் ரேகாவின் அட்வைஸ்படி தான் கோலிவுட்டில் கும்மியடிக் கிறார்களாம்.

அதிலும் ஹரின் கல்யாμக்கு இதுவரை எந்தப்படமும் உருப்படியா ஓடுனதாத் தெரியல. தன்னோட அம்மா-அப்பா பேச்சைக்கூட ஹரிஷ் கேக்குறதில்லயாம். எல்லாம் ”ரேகா மேடம் பார்த்துக்குவாங்க”. இதே கதை தான் அதர்வா கதையும். இவர் நடித்து ரிலீசான முக்கால்வாசிப் படங்கள் ‘பிம்பிலிக்கி பிலாக்கி’ ரகங்கள் தான் என்றாலும் கையிலிருக்கும் ஐந்தாறு படங்களும் நொண்டியடிப்பதற்குக் காரணமே ரேகா தானாம்.

”ஏற்கனவே தமிழ் சினிமா குத்துயிரும் குலையிருமா கிடக்கு. இதுல இந்த மாதிரி பி.ஆர்.ஓ.க்களின் அக்கப் போர் வேற” என நம்மிடம் ரொம்பவே சலித்துக் கொண்டார் பிரபல தயாரிப்பாளர் ஒருவர்.

-மதுரையான்

 

 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.