கடலூர் மேயர் பதவி – திமுகவினர் இடையே போட்டி -போலீசார் குவிப்பு !
கடலூர் மேயர் பதவி – திமுகவினர் இடையே போட்டி !
கடலூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு கடலூர் நகர செயலாளர் ராஜாவின் மனைவி சுந்தரியை தி.மு.க தலைமை அறிவித்திருந்தது. இந்த நிலையில் அதற்கு எதிராக கடலூர் மாவட்ட தி.மு.க பொருளாளர் வி.எஸ்.எல் குணசேகரனின் மனைவி கீதா குணசேகரன் மேயர் பதவிக்கான வேட்புமனுவை தாக்கல் செய்வதற்காக மாநகராட்சி அலுவலகத்திற்குள் வந்துள்ளார். மேலும் கீதா குணசேகரன் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக ஓடிவந்தார்.
இதையடுத்து கடலூர் மாநகராட்சி மேயரை தேர்வு செய்வதற்கு தேர்தல் நடைபெற உள்ளது. திமுக தலைமை அறிவித்த வேட்பாளருக்கு பதிலாக திமுக மாவட்ட பொருளாளரின் மனைவி வேட்புமனு தாக்கல் செய்திருப்பது கடலூர் மாவட்ட திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் பதவியில் விடுதலை சிறுத்தை கட்சி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி மேயரை தேர்வு செய்ய தேர்தல் நடைபெற்றுக் கொண்டு உள்ளது. இதையடுத்து அங்கு போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.