அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு – ஒன்றினையும் சசிகலா, பன்னீர்செல்வம் – அதிருப்தியில் எடப்பாடி பழனிச்சாமி!

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு –

ஒன்றினையும் சசிகலா, பன்னீர்செல்வம் –

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

அதிருப்தியில் எடப்பாடி பழனிச்சாமி!

 

அதிமுகவில் மீண்டும் சசிகலாவை இணைக்க வேண்டும் என்ற வாதம் அதிமுகவின் கீழ்மட்ட நிர்வாகிகள் முதல் மேல்மட்ட நிர்வாகிகள் வரை அனைவரிடத்திலும் முன்பைக் காட்டிலும் தற்போது பலமாக குரல் எழுந்திருக்கிறது. மேலும் அதிமுக தேர்தலில் தொடர் தோல்வியை சந்தித்து வரும் நிலையின் வெளிப்பாடாகத்தான் வலுவான தலைமையை அதிமுகவில் ஏற்படுத்த வேண்டும், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் அதிமுகவின் வளர்ச்சி சாத்தியம் என்று ரத்தத்தின் ரத்தங்கள் தற்போது பலமாக குரல் கொடுக்கத் தொடங்கி இருக்கின்றனர் . மேலும் தற்போது நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை அதிமுக சந்தித்ததை அடுத்து சசிகலாவை அதிமுகவில் இணைக்க அதிமுகவிற்குள் மறைமுகமான முயற்சிகள் தொடங்கப்பட்ட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

3

இந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டம் கைலாசபட்டி பண்ணை இல்லத்தில் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் மேலும் டிடிவி தினகரன் மற்றும் அமமுகவையும், அதிமுகவில் அனைத்து கட்சியை வழிநடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது சம்பந்தமாக தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்திருந்தார்.
மேலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்திடம் அளிக்கப்பட்டதாகவும், அதைப் பெற்றுக்கொண்ட பன்னீர்செல்வமும் தீர்மானத்தின் மீது நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் நிர்வாகிகளுக்கு தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. இப்படி தீர்மானம் நிறைவேற்றப்பட முதலே பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளும் பன்னீர்செல்வத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்பு கொண்டு வருகின்றனர். இது மட்டுமல்லாது அதிமுகவைச் சேர்ந்த பல நிர்வாகிகள் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு தேனி மாவட்டத்தில் எடுத்து இருக்கக்கூடிய முடிவு நல்ல முடிவு, நீங்கள் வலுவாக முன்வையுங்கள், நாங்களும் பிறகு அதை அழுத்தமாக பிடித்துக் கொள்கிறோம் என்று ஓபிஎஸ்-யிடம் கூறி உள்ளார்களாம்.

4

இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் உதயகுமார், முன்னாள் எம்எல்ஏ ஆறு குட்டி போன்றவர்கள் ஓ பன்னீர்செல்வத்தை நேரடியாகச் சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

ஓபிஎஸ் தனது பண்ணை வீட்டில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய போது

இப்படி அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் தரப்பினரும் மற்றும் பல நிர்வாகிகளும் சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று வலுவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

அதேநேரம் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இதற்கு கடுமையாக எதிர்ப்புகளையும், எதிர்வினைகளையும் காட்டத் தொடங்கியிருக்கின்றனர். மேலும் சிலர் வலைதளங்களில் எடப்பாடி பழனிச்சாமி போட்டோவை போட்டு “மக்கள் நலனுக்காக தலைவர்கள் சமரசம் செய்து கொள்வதுண்டு, தலைமைத்துவத்தில் சமரசமே இல்லை” என்று பதிவிட்டு வருகின்றனர்.
அதிமுகவில் இவ்வாறு சலசலப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் சசிகலா சுற்றுப்பயணத்தை தொடங்கியிருப்பது அதிமுக வட்டாரத்தில் மேலும் பரபரப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.