மதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் மல்லை சத்யா மீது ஒழுங்கு நடவடிக்கையா? தாயகத்தில் புயல் வீசுமா – பரபரப்பு தகவல்கள்!

- ஆதவன்

0

மதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் மல்லை சத்யா மீது

ஒழுங்கு நடவடிக்கையா?

https://businesstrichy.com/the-royal-mahal/

தாயகத்தில் புயல் வீசுமா – பரபரப்பு தகவல்கள்!

 

கடந்த மாதத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரோனா என்னும் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது முழுமையாக குணம் அடைந்துள்ளார். சில வாரங்களுக்கு முன்பு தமிழ்நாடு முதல் அமைச்சர் வைகோவின் இல்லம் சென்று நலம் விசாரித்தார். இதனையடுத்து மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் 09.03.2022ஆம் நாள் காலை 10.00 மணிக்கு தாயகத்தில் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் நடைபெறும் என்று வைகோ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

மார்ச்சு 1ஆம் நாள் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சி வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் நடைபெற்றது. அதில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் வாழ்த்திப் பேசுவார்கள் என்று விழாவிற்கு 10 நாள்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட அழைப்பிதழில் வாழ்த்திப் பேசும் தலைவர்களில் கடைசியில் துரை வைகோவின் பெயர் மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வெளிவந்தவுடன் மதிமுக துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா தன் முகநூல் பதிவில்,

“மாமல்லபுரம் பேரூராட்சியில் வார்டு உறுப்பினராக தன் துணைவியார் துர்காசினி பம்பரம் சின்னத்தில் வெற்றிபெற உழைத்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். வெற்றிபெற்றவுடன் தமிழ்நாடு முதல் அமைச்சரைச் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றோம். இந்த வேளையில் உங்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம். ஏன் வைகோவிடம் வாழ்த்து வாங்கவில்லை என்று. வெற்றி செய்தி கிடைத்தவுடன் தலைவர் வைகோவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டேன். தலைவர் வைகோவும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்” என்று குறிப்பிட்டிருந்தார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இதனைத் தொடர்ந்து மல்லை சத்யாவின் ஆதரவாளர் தாயகம் சரவணன் தன் முகநூல் பக்கத்தில் மல்லை சத்யா மதிமுக என்னும் இயக்கம் வளர்வதற்கு உழைத்த உழைப்பையும் தியாகத்தையும் பட்டியலிட்டு பெருமைப்படுத்தியிருந்தார். மேலும், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி அமோகமாக வெற்றிபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் மட்டும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுகவில் போட்டியிட்ட மல்லை சத்யா மட்டும் தோல்வியடைந்தார். அதிமுக வெற்றிபெற்றது. கூட்டணிக் கட்சிகள் கடுமையாக உழைத்தன. ஆனால் மதிமுகவின் உள்ளடி வேலையால்தான் மல்லை சத்யா தோல்வியைச் சந்தித்தார். மல்லை சத்யாவின் தோல்விக்கு மருந்தாக அண்ணியார் துர்காசினி பேரூராட்சியில் வெற்றிபெற்றுள்ளார். அண்ணன் மல்லை சத்யாவின் அரசியல் வெற்றி இனி தொடரும். என்றும் மல்லை சத்யாவின் உண்மைத் தொண்டன் தாயகம் சரவணன் என்று அந்தப் பதிவில் மல்லை சத்யாவின் தோல்விக்கு மதிமுகவே காரணம் என்று கொளுத்திப் போட்டிருந்தார். மேலும் மல்லை சத்யாவின் உண்மைத் தொண்டன் என்ற அறிவிப்பு வேறு.

இந்தப் பதிவில்,“மல்லை சத்யா சாதிய ரீதியாக மதிமுகவில் ஓரம் கட்டப்படுகிறார்” என்றும் மல்லை சத்யாவை ஒருமையில் விளித்து ஒரு மதிமுகவைச் சார்ந்தவர்,“ ………. வெற்றிபெற்று முதலமைச்சரைப் பார்த்த இவன் நம்மவர் இளையத் தலைவர் துரை வைகோவைச் சந்தித்து வாழ்த்து வாங்கவில்லை” என்று மல்லை சத்யாவிற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் பல தெரிவிக்கப்பட்டிருந்தது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதிமுகவில் வெற்றி பெற்ற அனைவரும் தாயகத்தில் துரை வைகோவைச் சந்தித்து, அவருக்கு சால்வைகள் போர்த்தி வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டார்கள்.

மல்லை சத்யா பேரூராட்சித் தேர்தலில் வெற்றிப் பெற்ற தன் துணைவியாரை அழைத்துச் சென்று வாழ்த்து வாங்கவில்லை என்பதால் மதிமுகவின் இளம் ரத்தங்கள் கொதிப்படைந்தன. இது குறித்து நம்மிடம் பேசிய மதிமுகவின் முன்னணி பிரமுகர் ஒருவர்,“மதிமுகவின் துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா, அரசியலில் தற்போது நுழைந்துள்ள துரை வைகோவிடம் எப்படி வாழ்த்து பெறுவார். எல்லாரையும் வாழ்த்துகிற அளவுக்கு துரை வைகோ அரசியல் களத்தில் என்ன தியாகம் செய்துவிட்டார். துரை வைகோ ஒரு தலைமைக் கழகச் செயலாளர் அவ்வளவுதான். அவர் அதிகாரம் என்பது மிகச்சொற்பமானதுதான். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிப் பெற்றவர்கள் யாரும் துணைப்பொதுச்செயலாளர் நிலையில் உள்ள மல்லை சத்யாவைச் சந்தித்து வாழ்த்துப் பெறவில்லை என்பது கட்சியின் புரோட்டோகாலை மீறிய செயல். பொதுச்செயலாளர் வைகோ உடல்நலம் சரியாகி அவர் மீண்டும் கட்சிப் பணியாற்றுகின்ற இடைப்பட்ட காலத்தில் பொதுச்செயலாளர் பொறுப்பை மல்லை சத்யாதான் ஏற்றிருக்கவேண்டும். அவரை ஏற்கவிடாமல் கட்சியின் முன்னணித் தலைவர்களில் சிலர் தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோவை பொதுச்செயலாளர் போல் முன்னிறுத்துகின்றனர். மார்ச்சு 1ஆம் நாள் நடைபெற்ற முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் கட்சியின் தலைவர் என்ற முறையில் துரை வைகோ கலந்துகொள்ள யார் அனுமதி வழங்கியது? பொதுச்செயலாளர் உடல்நிலை காரணமாக முறைப்படி மல்லை சத்யாதானே கலந்துகொண்டிருக்கவேண்டும். மதிமுக தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இயக்கம், வாரிசு அரசியலை எதிர்க்கத் தொடங்கப்பட்ட இயக்கம். இப்போது வாரிசு அரசியல் என்னும் புயல்காற்றில் சீரழிகின்றதே” என்று வேதனையுடன் முடித்துக்கொண்டார்.

துரை வையாபுரி இல்லாத விளம்பரம்

கடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைப் புறக்கணித்த மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி இந்தக் கூட்டத்தையும் புறக்கணிப்பார் என்றும் கலந்துகொள்ள மாட்டார் என்றும் தாயக வட்டாரத்திலிருந்து நமக்குச் செய்திகள் கிடைத்துள்ளன. திருப்பூர் துரைசாமியோடு கடந்த மாவட்டச் செயலாளர் கூட்டத்தைப் புறக்கணித்த மதிமுக கொள்கைப்பரப்புச் செயலாளர் ‘பொடா’ அழகுசுந்தரத்தின் கட்சிப் பொறுப்பு பறிக்கப்பட்டு, தலைமை நிலையச் செயலாளர் நிலையில் இருந்த வந்தியதேவனிடம் வழங்கப்பட்டது. துரை வைகோ தலைமைக் கழகச் செயலாளர் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மல்லை சத்யாவைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தை கட்சிகளின் 2ஆம் கட்ட தலைவர்கள் மல்லை சத்யாவை விசிகவிற்கு அழைத்தனர். மல்லை சத்யா ‘வாழும் வரை வைகோவுடன்தான்’ என்று உறுதியாக தெரிவித்த செய்தி அரசியல் வட்டாரத்தை ஒரு கலக்கு கலக்கியது. இப்போது நிலைமை வேறாகவிட்டது. பொதுச்செயலாளர் நிலைக்கு நிகர உயர்ந்துவிட்ட துரை வைகோவை மல்லை சத்யா மதிப்பதில்லை என்ற எண்ணம் கட்சியின் மேல்மட்டத் தலைவர்களிடம் உள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சார்ந்த மதிமுகவின் ஒடுக்கப்பட்ட இனம் சார்ந்த தொண்டர்களிடம் மல்லை சத்யா ஒதுக்கப்படுவது என்பது கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகின்றது என்பதற்கு சமூக ஊடகமான முகநூல் சான்றாக உள்ளது. இதனைத் தொடர்ந்து, மல்லை சத்யாவின் ஆதரவாளர்களின் நடவடிக்கைகளை அடக்குவதற்கு மல்லை சத்யா மீது மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் துரை வைகோவிற்கு எதிராக செயல்படுகிறார், தொண்டர்களைத் தூண்டிவிடுகிறார் என்ற கோணத்தில் ஒழுங்கு நடவடிக்கை இருக்க வாய்ப்பு உள்ளதாக தாயக வட்டாரத்திலிருந்து கிடைக்கும் செய்தி, மதிமுகவில் ஒரு புயல் மையம் கொண்டிருக்கிறது என்பதை உணரமுடிந்தது. புரட்சிப் புயலின் தாயகத்தில் புயல் வீசுமா? புயல் பலவீனமாகுமா? வானிலை அறிக்கையைத் தாயகம் தெரிவிக்கும்.

ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.