வைகோ செல்பி மூலம் திரட்டிய நிதி எவ்வளவு தெரியுமா ? .
வைகோ செல்பி மூலம் திரட்டிய நிதி எவ்வளவு தெரியுமா ? .
வைகோ தனது ராஜ்யசபா எம்.பி. பதவிக்கான சம்பளம் முழுவதையும் கட்சிக்கே அளிப்பதாக அறிவித்துள்ளார். மதிமுகவின் வடசென்னை மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் சென்னையில் சுதந்திர தினத்தன்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு வைகோ தலைமை தாங்கினார். அடுத்த மாதம் சென்னையில் நடைபெற உள்ள அண்ணா பிறந்தநாள் மாநாடு குறித்து வைகோ பேசினார்.
அப்போது பேசிய வைகோ ‘ நமது கட்சி ஒன்றும் மிட்டா மிராசுகளின் கட்சி அல்ல. என்னுடைய மாதச் சம்பளத்தைக் அனுப்பும் முகவரியாக கட்சி அலுவலகத்தின் பெயரைதான் நாடாளுமன்றத்தில் எழுதிக் கொடுத்துள்ளேன். அந்த பணத்தை வைத்துக்கொண்டு நிகழ்ச்சிக்கான செலவுகளை செய்யலாம்.’ எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக வைகோவுக்கு சால்வை அணிவிக்க வேண்டாம் என்றும் அவரோடு புகைப்படம் எடுத்துக்கொள்ள 100 ரூபாய் அளிக்க வேண்டும் எனவும் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதன்மூலம் ரூ.1,19,050 நிதியாகக் கிடைத்துள்ளது.
இதன்மூலம் நிதி திரட்டும் முயற்சியில் தனி மனிதனாக களமிறங்கியுள்ளார் வைகோ.