திமுக – காங்கிரஸ் கூட்டணி முறிவு நடக்குமா ? நடந்தால் எப்போது ?

0

திமுக – காங்கிரஸ் கூட்டணி முறிவு நடக்குமா ? நடந்தால் எப்போது ?

 

இந்த கேள்விதான் விடை தெரியாமல் ஊடகங்கள் பெரும் விவாதங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறன. காஷ்மீர் பிரச்சனையில் திமுகவின் கூட்டணியில் உள்ள மதிமுக பொதுச்செயலர் வைகோ மாநிலங்களவையில் ஆற்றிய கொந்தளிப்பான உரையில், “காஷ்மீர் பிரச்சனையைக் காங்கிரஸ் கட்சி சரியாக கையாளவில்லை. அதன் தொடர்ச்சியாக பாஜக கழுத்தை நெரித்து கொலை செய்கிறது” என்று குறிப்பிட்டார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அழகிரி, ஈவிகேஎஸ் இளங்கோவன் போன்றவர்கள் வானத்திற்கும் பூமிக்கும் குதித்தார்கள். பொதுவெளியில் ஆட்சி அதிகாரத்தில் இல்லாத செத்தபாம்பு காங்கிரஸ் இதை ஏன் இந்த அடி அடிக்கவேண்டும் வைகோ என்றும் கேள்விகள் எழுந்தன.

https://businesstrichy.com/the-royal-mahal/

தொடர்ந்து நாளிதழ்களில் காங்கிரஸ் – மதிமுக மோதல் அறிக்கைகள் தொடர்ந்து வெளிவந்தன. இது குறித்து வைகோ செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஈழத்தமிழர்களை கொன்ற பாவிகள் காங்கிரஸ் கட்சியினர். இவர்களுக்கு மன்னிப்பே கிடையாது” என்று கோபம் கொப்பளிக்க கூறினார். அமித்ஷா கூறித்தான் காங்கிரஸ் கட்சியை வைகோ தாக்குகிறார் என்று கொந்தளித்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன். இது குறித்தும் வைகோவிடம் செய்தியாளர் கேட்டபோது, தகுதியில்லாத கேள்விகளுக்குப் பதில் கூறி என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று காங்கிரஸ் கட்சியைப் புறம் தள்ளினார்.

 

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

வைகோ தில்லியில் தன் நண்பர்கள் என்று பல பாஜகவினரைச் சந்தித்தார். காங்கிரஸ் கட்சியில் மன்மோகன் சிங்கை மட்டுமே சந்தித்தார். சேனியா, இராகுல்காந்தியைச் சந்திக்கவில்லை என்பதையும் காஷ்மீர் பிரச்சனையில் பிஜேபியோடு சேர்த்து காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக சாடியது என்பதையும் திமுகவின் தலைவர் ஸ்டாலின் கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை. மேலும் திமுக இது குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இது கூட்டணியைக் குலைத்துவிடுமோ என்றும் திமுக அஞ்சவும் இல்லை. இயல்பாகவே இருந்தது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

கலைஞர் நினைவு நாளின்போது சென்னை இளைஞர் அணி அலுவலகமான அன்பகத்தில் கலைஞர் சிலை திறந்தபோது தில்லியிலிருந்து முக்கிய தலைவர்கள் யாரும் வரவில்லை. சிலை திறந்து வைத்து உரையாற்றிய மேற்குவங்க முதல்வர் மம்தா “திமுகவும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் இந்தியாவில் மதவாதம் ஒழிக்கப்பாடுபடும் என்றும் மோடிக்கு எதிராக மாநில கட்சிகள் ஒருங்கிணைப்படும்” என்றும் குறிப்பிட்டார். திமுக தலைவர் பேசும்போது,“மம்தா ஒரு வீரப்பெண். இவர் இந்தியாவில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துவார். திமுகவும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் மோடி அரசையும் அதன் மதவாதத்தையும் தொடர்ந்து எதிர்க்கும்” என்று குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சியினர் திமுக தலைவரின் பேச்சு காங்கிரஸ் திமுக கூட்டணிக்குக் காட்டப்படும் சிவப்பு சிக்னலாகப் பார்த்தார்கள்.

 

சரி, திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதிபடுமா? உடைந்து சிதறுமா என்றால் இரண்டு கட்சிகளும் நீண்ட நாளைக்கு கூட்டணியில் இருக்கமாட்டார்கள். திமுக காங்கிரஸ் கட்சியை எப்போது வேண்டுமானாலும் கழற்றிவிடக் காத்திருக்கிறது என்பதே இப்போதைய அரசியல் வட்டாரங்களிலிருந்து கிடைக்கும் கசிவான செய்தியாகும்.

 

எதிர்வரும் அக்டோபர் இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட இருக்கின்றது. இதில் அதிமுகவும் ஆர்வமாக இருப்பதாகவே தெரிகிறது. அப்படி அறிவிக்கப்பட்டால் திமுக-காங்கிரஸ் கூட்டணி உள்ளாட்சித் தேர்தலில் இருக்கும். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால், நாங்குநேரியில் திமுக நிற்க ஆசைப்படும். திருச்சிப் பொதுக்கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலர் உதயநிதி வெளிப்படையாகவே அறிவித்தார். நாங்குநேரி காங்கிரஸ் தொகுதி அதை விட்டுக் கொடுக்க காங்கிரஸ் சம்மதம் தெரிவிக்குமா? என்பது பெரிய கேள்விக்குறிதான். காங்கிரஸ் நாங்குநேரியை திமுகவுக்குக் கொடுத்து சம்மதம் என்ற வெள்ளைக்கொடி வீசினால் கூட்டணி தொடரும். இல்லை நாங்குநேரியில் நாங்கள் போட்டியிடுவோம் என்று காங்கிரஸ் அறிவித்தால் கூட்டணி முறிந்ததாக திமுக தரப்பில் உடனே அறிவிக்கப்படும். காங்கிரஸ் கூட்டணிக்கு வளைந்து கொடுக்குமா? நிமிர்ந்து நிற்குமா? இடைத் தேர்தல் முடிவுக்கு முன்பு கூட்டணியின் முடிவு தெரிந்துவிடும்.

 

-ஆசைத்தம்பி

 

 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.