திமுக எம்எல்ஏ கூட்டத்தில் மு க ஸ்டாலின் எச்சரிக்கை !
திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று மார்ச் 18 சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய மு.க.ஸ்டாலின் எம்எல்ஏக்கள் எவ்வாறு சட்டமன்றத்தில் செயல்பட வேண்டும். எப்படி மக்களிடம் செயல்பட வேண்டும் என்று பல்வேறு அறிவுரைகளை வழங்கி இருக்கிறார். மேலும் சட்டமன்றத்தில் எழுப்ப வேண்டிய கேள்விகள், தொகுதி மக்களின் தேவைகள் எப்படி பேசவேண்டும் என்பது குறித்து சில அறிவுரைகளை முதல்வர் எம்எல்ஏக்களுக்கு வழங்கியிருக்கிறார். அதோடு சட்டமன்றத்தின் மாண்பை காக்கும் வகையில் திமுக எம்எல்ஏக்கள் நடந்துகொள்ள வேண்டும். அதிமுகவினர் வெளிநடப்பு செய்த செல்லும்பொழுது கூச்சலிட வேண்டாம் என்று பல்வேறு அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கிறது. மாவட்ட வாரியாக ரிப்போர்ட் தற்போது கையில் இருக்கிறது. பல மாவட்ட செயலாளர்கள் மீதும் குற்றச்சாட்டு வந்த வண்ணம் இருக்கிறது. பார்த்து நடந்து கொள்ளுங்கள் இனி தவறு நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் யார் யார் என்ன செய்தீர்கள் என்று எல்லாம் எனக்கு தெரியும், எல்லாம் எனது கையில் இருக்கிறது. என்று கூட்டத்திற்கு வருகை தந்த எம்எல்ஏக்களை எச்சரித்து அனுப்பினாராம் முதலமைச்சர்.