ராஜேந்திர பாலாஜி ஆதரவாளர்களுக்கும் அதிமுக தலைமை கூறிய அறிவுரை!

0

திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்து ஓராண்டு ஆகிறது. இந்த நிலையில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி மற்றும் ஜெயக்குமார் ஆகிய இருவர் திமுக அரசு பதவியேற்ற பிறகு கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இப்படி வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்ததாக கூறி ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்படும் பொழுது அதிமுக தலைமையிடம் இருந்து பெரிய எதிர்ப்பு இல்லை, மேலும் ராஜேந்திர பாலாஜிகான பெரிய உதவியும் அதிமுக தரப்பிலிருந்து செய்து கொடுக்க க்ஷபடவில்லை, ஆனால் ஜெயக்குமார் கைதின் போது அதிமுக மிகப் பெரிய எதிர்ப்பை தெரிவித்தது, அதிமுக தலைமை ஜெயக்குமாரை சிறைச் சென்று வந்ததற்காக தற்போது வரை கொண்டாடி வருகிறது.

இந்த நிலையில் அதிமுகவில் உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆதரவாளர்கள், “தலைமை அண்ணன் ராஜேந்திர பாலாஜியிடம் ஒருதலைபட்சமாக நடத்துகிறது, ஓரவஞ்சனை செய்கிறது”, என்று காட்டமாக கேள்வி எழுப்ப அதிமுக தலைமையோ எங்களுக்கு எல்லாரும் ஒண்ணு தான் ராஜேந்திர பாலாஜியும் முக்கியம், ஜெயக்குமாரும் முக்கியம் என்று சொல்லி….குறைக் கூறி வந்தவர்களிடம் அறிவுரை கூறி திருப்பி அனுப்பிவிட்டார்களாம்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.