ராணுவ பணியில் இறந்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியளித்த ஆயுதப்படை காவலர் பாபு  !

0

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

ராணுவ பணியில் இறந்த வீரர்களின் குடும்பத்திற்கு

நிதியளித்த ஆயுதப்படை காவலர் பாபு  !

 

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

ராணுவ பணியின் போது இறந்த  தமிழகத்தை சேர்ந்த இரண்டு இராணுவ வீரர் குடும்பங்களுக்கு  கோவை ஆயுதப்படை காவலா்கள் நிதியுதவி அளித்தனா்.

 

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

கோவை மாவட்டத்தை சேர்ந்த ஆயுத படையில் பணி புரியும்  முதல்நிலை காவலர் பாபு  சமூக ஆா்வலரான இவா் ஏழை எளியோருக்கு உதவி செய்து வரும் நிலையில்   காவ்துறை மற்றும் ராணுவத்தில் உயிர் இழந்தவா்களுக்கு நண்பா்கள் மற்றும் காவலா்களிடம் உதவும் கரங்கள் என்ற குழு  அமைத்து அதன் மூலமாக சக காவலர்கள் மற்றும் நண்பர்கள் மூலமாக நன்கொடை பெற்று உதவி வருகிறார் இந்த நிலையில் இதேபோல்  ரூபாய் ரெண்டு லட்சம் ரூபாயை நிதி திரட்டினார்.

ராணுவ பணியில் இறந்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியளித்த ஆயுதப்படை காவலர் பாபு
ராணுவ பணியில் இறந்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியளித்த ஆயுதப்படை காவலர் பாபு

அவ்வாறு பெறப்பட்ட நிதியை நாட்டுக்காக பாடுபட்டு  பணியின்போது இறந்த தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கம்மாளப்பட்டி பகுதியை சோ்ந்த பூபதி மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை சோ்ந்த பிரகாஷ்  ராணுவ வீரர்களின் குடும்பத்தினரிடம் தலா   ஒரு லட்சம்  வீதம் இரண்டு குடும்பங்களுக்கு இரண்டு லட்ச ரூபாயை  வழங்கினார்.

 

இதுவரை ராணுவ வீரா் அல்லது காவல்துறையினா் உயிர் இழந்தால் சம்பந்த பட்ட துறையினா் மட்டுமே நிதியை திரட்டி வழங்கி வந்த நிலையில்  இதுவரை யாரும் இதுபோன்று செய்யாத ஒரு புது  நிகழ்வை  இவர் நடத்தி இருக்கிறார். மனிதநேயம் உள்ள கோவை மாவட்டம் காவல்துறையின்  பணி சிறப்புமிக்கது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.