திருச்சி ஓட்டல்களில் குடியும் குடித்தனமாக நடக்கும் விபச்சாரம் !
திருச்சி ஓட்டல்களில் குடியும் குடித்தமாக நடக்கும் விபச்சாரம்.
திருச்சியில் சமீபத்தில் வீடுகளில் விபச்சார தொழில் பெருகி வருகிறது, கருமண்டபம், கே.கே.நகர், எடமலைபட்டிபுதூர், பெரியமிளகுபாறை, பொன்மலை, என்று நகரின் பல பகுதியில் விபச்சாரம் தங்கு தடையில்லாமல் நடைபெற்று வருகிறது.
இந்த சமூக சீர்கேட்டு பிரச்சனையில் கல்லூரி மாணவர்கள் சிக்கி தவித்து வருவது தான் மிகப்பெரிய சோகம். வெளியூர்களிலிருந்து திருச்சியில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களை குறிவைத்தே இந்த கும்பல்கள் செயல்பட்டுக்கொண்டு வருகின்றது.
இது கூறித்து அவ்வப்போது பல புகார்கள் வந்து கொண்டுயிருந்தாலும் அதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதில் சில நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. காரணம் கணவன் மனைவி போலவே வீடு எடுத்து தங்கி கஸ்டமர்களை தங்கள் உறவினர்கள் போலவே வரவழைத்து விபச்சார தொழிலை யாருக்கும் சந்தேகம் வந்துவிடாத வண்ணம் மிகச்சிறப்பாக செய்துவருகின்றனர். விபச்சாரம் வீடுகளில் மட்டுமல்லாது ஹோட்டல் லாட்ஜ்களிலும் அமோகமாக நடைபெற்று வருகிறது.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் லாட்ஜ்களில் விபச்சாரத்தொழில் கலைக்கட்டுகிறது. சமீபத்தில் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள திரைப்பட நடிகர் ராகவா லாரன்சின் படத்தின் பெயரைக்கொண்ட ஹோட்டலில் இரவு 10 மணிக்கு மேல் TN-48-64– என்கிற ஆட்டோவில் சுமார் 30 வயது மதிக்கதக்க மூன்று பெண்கள் தலையில் மல்லிகை பூவுடனும், கையில் பேக்குடனும், பளிச்சென்ற மேக்கப்புடன் சென்று வருவது வழக்கமாக இருந்துவருகிறதாம். இவை யனைத்தும் அவ்விடுதியின் வாட்ச்மேன் துணையுடன் இயங்கிக்கொண்டிருக்கிறது என்கின்றனர். அப்பகுதி மக்கள்.
ஒருபக்கம் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் வீடு வீடாக சோதனை செய்துக்கொண்டிருக்க, விபச்சார கும்பலோ அடுத்தக்கட்ட லெவலுக்கு மாறி சென்றுக்கொண்டிருக்கிறது.