நீ பீஸ் கட்டல – தேர்வு எழுத விடாமல் விரட்டிய பள்ளி – அழுதபடி வெளியே மாணவி !

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

நீ பீஸ் கட்டல – தேர்வு எழுத விடாமல் விரட்டிய பள்ளி – அழுதபடி வெளியே மாணவி !

 

பள்ளிக்கட்டணம் செலுத்த முடியாததால் காலாண்டு தேர்வுக்கு அனுமதிக்காமல் பள்ளியிருந்து மாணவியை வெளியே தூரத்தியது தனியார் பள்ளி நிர்வாகம்! அம்மாணவி வீட்டிற்க்கு செல்லாமல் பள்ளி கேட்டின் அருகே நின்று அழுது கொண்டே இருந்ததை பார்த்த மக்களும் மாணவர்களும் பெருங்கோபம் அடைந்தனர் சிறிது நேரத்தில் மாணவியின் தாயும் அங்கு வந்தார் நிலமையை கேட்டு இருவரும் பள்ளி வாசலில் நின்று அழுதனர் . TCயை தாருங்கள் நான் அரசு பள்ளியில் படிக்கவைத்துக்கொள்கிறேன் என சொல்லி தாயும் அழ அப்பள்ளியில் சற்று நேரம் மயான அமைதி நிலவியது!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே கடமலைக்குண்டு கிராமத்தில் #ஹயக்ரீவா என்னும் சமஸ்கிருத பெயர் தாங்கிய தனியார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. இந்த பள்ளியில் கடமலைக்குண்டு கிராமத்தை சேர்ந்த இலக்கியா-ஆனந்தன் தம்பதிகளின் மகள் யுகிதா ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். யுகிதாவின் தந்தை ஆனந்தன் விவாகரத்து பெற்று பிரிந்து சென்றுவிட்ட நிலையில், மகளை இலக்கியா கஷ்டப்பட்டு படிக்க வைத்து வருகிறார், எல்கேஜி வகுப்பு முதல் ஏழாம்வகுப்பு வரை இதே பள்ளியில் படித்து வரும் யுகிதா நடப்பாண்டு கல்விக்கட்டணம் செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். 25 ஆயிரம் பள்ளிக்கட்டணம் செலுத்த பள்ளி நிர்வாகம் கூறிய நிலையில் கடந்த வாரம் 6 ஆயிரம் ரூபாய் தொகையை யுகிதா தாயார் செலுத்தியுள்ளார் .

 

3

இந்நிலையில் எஞ்சிய தொகையையும் உடனே கட்டவேண்டும் என்று கூறி இன்று நடைபெறும் காலாண்டுத்தேர்வை எழுதவிடாமல் மாணவியை வெளியேற்றியது பள்ளி நிர்வாகம்.

இதனால் பள்ளி வாசலில் சீருடை மற்றும் புத்தகபையுடன் அழுதுகொண்டே நின்றிருந்தார். தகவலறிந்த மாணவியின் தாயார் இலக்கியா பள்ளிக்கு வந்து கண்ணீர்மல்க அழுது கொண்டே வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பள்ளி கட்டணம் செலுத்தாத காரணத்தால் மாணவியை தேர்வு எழுத அனுமதிக்காமல் வெளியேற்றியது

4

மனித உரிமை மீறல் இல்லையா -25% ஏழை மாணவ மாணவியருக்கான கட்டணமில்லாத படிக்க இருக்கிறதே அது என்ன ஆயிற்று.

 

கல்வி பெரும் வியாபார பொருளாக மாற்றியிருப்பது பேராப்பதானது என்பதை எப்போது உணரப்போகிறோம்.

 

இலக்கியன் சூனாம்பேடு

 

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.