அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மாதம் ரூ 8000 உதவித்தொகையுடன் தொல்லியல் படிப்பு ! வெளியான அறிவிப்பு !

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

தமிழக அரசின் தொல்லியல் துறையின், தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனத்தின் சார்பில், 2026 கல்வி ஆண்டுக்கான ஓராண்டு, ஈராண்டு மற்றும் முழுநேர முதுநிலைப் பட்டயப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
தொல்லியல் முதுநிலைப் பட்டயப் படிப்பு (Post–Graduate Diploma in Archaeology (PGDA)) என்ற இரண்டாண்டு படிப்புக்கு 20 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த படிப்பில் சேருவதற்கு எந்த பாடபிரிவிலும் முதுநிலை முடித்திருக்க வேண்டும்.
கல்வெட்டியல் முதுநிலைப் பட்டயப் படிப்பு (Post–Graduate Diploma in Epigraphy (PGDE)) என்ற இரண்டாண்டு கால படிப்புக்கு 10 இடங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. தமிழ் (Indian history/history/ ancient history and archaeology/ history and archaeology) ஆகிய பாடப்பிரிவில் முதுகலை முடித்திருக்க வேண்டும்.
மரபு மேலாண்மை மற்றும் அருங்காட்சியகவியல் முதுநிலைப் பட்டயப் படிப்பு (Post–Graduate Diploma in Heritage Management and Museology (PGDHMM)) என்ற இரண்டாண்டு படிப்பிற்கு பி.இ. சிவில் இன்ஜினியரிங், அல்லது Humanities/social/chemistry/physical/biological/geo ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் முதுகலை முடித்திருக்க வேண்டும்.
மேற்கண்ட இம்மூன்று பட்டயப்படிப்புகளும் தமிழ் மற்றும் ஆங்கில பயிற்று மொழியில் பயிற்றுவிக்கப்படும். குறைவான இடங்களே உள்ள இந்த படிப்புகளை எழுத்துத்தேர்வை நடத்தி அதில் பெறும் மதிப்பெண்களை வைத்துதான் இடத்தை உறுதி செய்கிறார்கள். Tamil literatury, history, archaeological excavation (tn-india), epigraphy, architecture, iconography, numismatics, museology, conservation and preservation of historical monuments ஆகிய பாடப்பிரிவுகளிலிருந்து நூறு கேள்விகள் கேட்கப்படும்.
முதுகலையில் தமிழ் பயின்றவர்கள் மட்டுமான தமிழ் வழியில் மட்டுமே பயிற்றுவிக்கப்படும், ஓராண்டுக்கான சுவடியியல் முதுநிலைப் பட்டயப் படிப்பில் (PGDMSS) Post–Graduate Diploma in Manuscriptology (PGDMSS) வெறும் 8 மாணவர்கள் மட்டுமே சேர முடியும்.
ஆகிய பாடப்பிரிவுகளில் மாணவர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் சேர்ந்து பயிலலாம். இதற்கு தமிழில் முதுகலை படித்திருக்க வேண்டும். மேலும், தமிழ் இலக்கணம், தமிழ் இலக்கியம் மற்றும் சுவடியல் ஆகிய பாடங்களிலிருந்து 100 கேள்விகள் கேட்கப்படும்.
மேற்கண்ட அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றவர்களை நேர்காணல் செய்து பிறகுதான் இடம் உறுதி செய்யப்படும்.
இப்படிப்பில் சேரும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் ரூ8000/- கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
இப்பாடப்பிரிவுகளில் சேர்வதற்கான எழுத்துத்தேர்வுகள் 19.07.2026 அன்று சென்னை, விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, சேலம், மதுரை ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
தமிழக அரசின் தொல்லியல் துறையில் நேரிலோ அல்லது www.tnarch.gov.in என்ற இணையதளத்தின் வழியாகவோ, அல்லது tnlam2026@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாகவோ சேர்க்கை படிவத்தை பெற்று, உரிய கல்விச்சான்றுகளுடன் இணைத்து, “ THE COMMISSIONER (FAC), DEPARTMENT OF ARCHAEOLOGY, TAMIL VALARCHI VALAGAM, THAMIZH SALAI, EGMORE, CHENNAI – 60008.” என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 08.07.2016 மாலை 5.மணி
கூடுதல் விவரங்களுக்கு : 044 – 2819 0023 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

விண்ணப்பபடிவத்தை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

Application form – TNIAM – 2026 (All Courses)

—  அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.