அங்குசம் பார்வையில் ‘எங்கள் தங்கம்’

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தயாரிப்பு : ‘ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ்’. கதை : ராஜ் நிடிமோரு, டைரக்‌ஷன் : பி.வி.நந்தினி ரெட்டி. ஆர்ட்டிஸ்ட் : சமந்தா, கெளதமி, திகந்த் மஞ்சாலே, ஆனந்த், ஸ்ரீலக்‌ஷ்மி, குல்சன் தேவய்யா, மஞ்சு ஷா, ஸ்ரீமுகி, ஒளிப்பதிவு : ஓம் பிரகாஷ், இசை : சந்தோஷ் நாராயணன், நடனம் : போனி வர்மா, ஸ்டண்ட் : மார்வெல் நட்ராஜ், பி.ஆர்.ஓ. : யுவராஜ்.

பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் அனிருத் [ திகந்த் மஞ்சாலே] ஏழ்மையான  ஸ்வர்ணாவை [ சமந்தா] காதலித்து கல்யாணம் செய்து கொண்டு தனது சொந்த ஊருக்கு வருகிறார். அங்கே அம்மா காமாட்சியும்[ கெளதமி], அப்பா ராமய்யாவும் [ ஆனந்த்] இவர்களை ஏற்றுக் கொள்ளத் தயங்கினாலும் வீட்டுக்குள் இருக்க அனுமதிக்கிறார்கள். மாமியார் காமாட்சியை கொஞ்சம் கொஞ்சமாக வசப்படுத்த தனது தோழி மஞ்சு ஷாவை வரவைக்கிறார் ஸ்வர்ணா. அதே ஊரில் ஒரு ராவடி கும்பல் ஸ்வர்ணாவை ஃபாலோ-அப் பண்ணிவிட்டு, ஜெயிலில் இருக்கும் தங்களது தலைவனான கருணாவிடம் [ குல்ஷன் தேவய்யா] ஜான்சியைப் பார்த்ததாகச் சொல்கிறது. அப்படின்னா ஸ்வர்ணா யார்? ஜான்சி யார்? என்பதற்கு விடை தான் இந்த ‘எங்கள் தங்கம்’.

இந்த வார அங்குசம் வார இதழில்…

எங்கள் தங்கம்’ தனது தற்போதைய காதல் மனைவி சம்ந்தாவுக்காக கதை எழுதியிருக்கிறார் ராஜ் நிடிமோரு. எப்பா கதாசிரியரே மனைவிக்காக கதை எழுதுறதுன்னு முடிவு பண்ணிட்ட சரி. அதைக் கொஞ்சம் விசால மனப்பான்மையுடன் எழுதக்கூடாதாய்யா? இதைப் பத்தி கடைசில எழுதுவோம். இப்ப சமந்தாவைப் பத்தியும் அவரின் நடிப்பு பத்தியும் மட்டும் பார்ப்போம்.

நாகசைதன்யாவுடன் விவகாரத்து, மயோஸிடீஸ் என்ற தோல் அலர்ஜி வியாதி, இதனால் மன அழுத்தம் இவற்றிலிருந்து மீண்டு வந்துள்ள சமந்தா இதில் நடிப்பில் குறையொன்றும் வைக்கவில்லை. அதிலும் ஆக்‌ஷன் காட்சிகளில் அசத்தியிருக்கார். அதே போல் மாமியார் கெளதமியிடம் அசடு வழிவது, பின் அவரிடமே பாராட்டு வாங்குவது எல்லாம் ஓகே. ஆனால் உடல் ரொம்பவே மெலிந்து காணப்படுவது தான் கொஞ்சம் வருத்தமாக உள்ளது.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

எங்கள் தங்கம்’ இதில் சமந்தா, கெளதமியைத் தவிர மற்ற எல்லோருமே நமக்கு பரிச்சயமில்லாத தெலுங்கு முகங்கள் தான் என்றாலும் சமந்தாவின் தோழியாக வரும் மஞ்சு ஷாவின் நடிப்பு நல்லா ரசிக்கும்படி உள்ளது. நம்ம சினிமாக்களில் ஹீரோயின் ஓரியண்டட் கதைகளுக்குன்னே இருக்கும் எஸ்.வி.சேகர், ராஜா மாதிரி அந்த ஊரில் திகந்த் மஞ்சாலே இருப்பார் போல. வில்லனாக வரும் குல்ஷன் தேவய்யா, பார்க்க ஸ்மார்ட்டாக இருக்கிறார், நல்லாவும் நடிச்சிருக்கார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இப்ப வருவோம் மேட்டருக்கு… நக்சல்களை பொறுக்கிகள் போல காட்டியது டைரக்டரின்  அயோக்கியத்தனம். என்ன தான் பெண் வீரமிக்கமிக்கவளாக இருந்தாலும் ஒருத்தனுக்கு வாக்கப்பட்டுட்டா பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, புருஷனுக்கு சுகம் கொடுப்பது இதான் ரொம்ப முக்கியம். அப்ப தான் அவள் சிறந்த பெண். இதெல்லாம் நாம் சொல்லலைங்க.

எங்கள் தங்கம்’ இந்தப் படத்தின் இயக்குனர் சாட்சாத் நந்தினி ரெட்டி, க்ளைமாக்ஸில் சமந்தாவைவிட்டே வசனம் பேச வைத்தது தான் கொடுமை. அதைவிட பெருங்கொடுமை கொடுமை துளசி மாடத்தின் முன்பு நின்று சமந்தா  பாடுவது. எப்பா..ராஜ்நிடிமோரு மனைவிக்காக கதை எழுதி, படத்தையும் தயாரிச்சிருக்க. கொஞ்சமாவது விசால மனசுடன் எழுத வேண்டாமாய்யா…?

பிற்போக்குத்தனத்தின் மொத்த உருவமான இந்த ‘எங்கள் தங்கம்’—இத்துப் போன தகரம்.

அங்குசம் பார்வையில் ‘எங்கள் தங்கம்’ 33/100

–    ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.