பத்தாம் வகுப்பு முடித்திருந்தாலே, வெறும் 275 ரூபாயில் ஓராண்டு திறன் பயிற்சியா?
பத்தாம் வகுப்பு மட்டுமே படித்திருந்தால் போதும், வெறும் 500 ரூபாயில் அதுவும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருந்தால் வெறும் 275 ரூபாயில் ஒரு தொழில் படிப்பை படித்துவிட முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அதுவும் இந்த திறன் பயிற்சியில் சேர உச்ச வயது வரம்பு கிடையவே கிடையாது என்பது மற்றொரு ஆச்சர்யம்.
இப்படி ஒரு சலுகையில், இவ்வளவு விலை மலிவாக ஒரு திறன் பயிற்சியா? அப்படியே இருந்தாலும், அதற்கு மதிப்பு இருக்குமா? என்ற சந்தேகம் எழுகிறதுதானே?
இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சகத்தின் (MINISTRY OF SKILL DEVELOPMENT AND ENTREPRENEURSHIP ) தேசிய திறன் பயிற்சி இயக்குனரகத்தின் (DIRECTORATE GENERAL OF TRAINING) நேரடிகட்டுப்பாட்டில் இயங்கி வரும் மகளிருக்கான தேசிய திறன் பயிற்சி நிறுவனமான (NATIONAL SKILL TRAINING INSTITUTE FOR WOMEN) – NSTI (W ) திருச்சிராப்பள்ளியில் இயங்கிவரும் (NATIONAL COUNCIL FOR VOCATIONAL EDUCATION AND TRAINING –NCVET) நிறுவனம்தான், தேசிய தொழிற் கல்வி மற்றும் பயிற்சி குழுமத்தின் அங்கீகாரமுள்ள சான்றிதழுடன்கூடிய (கைவினைஞர் பயிற்சிதிட்டம் – CTS) முழுநேர திறன் பயிற்சிகளை வழங்குகிறார்கள்.
சரி, என்னென்ன பாடப்பிரிவுகள் இருக்கிறது?
ஆடைவடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பபயிற்சி (FASHION DESIGN & TECHNOLOGY) ; செயற்கை நுண்ணறிவு நிரலாக்க உதவியாளர் (ARTIFICIAL INTELLIGENCE PROGRAMMING ASSISTANT) ; பழங்கள் மற்றும் காய்கறிகள் பதப்படுத்துதல் (FRUITS AND VEGETABLE PROCESSING) ; கணினி வன்பொருள் மற்றும் நெட்வொர்க் பராமரிப்பு (COMPUTER HARDWARE & NETWORK MAINTENANCE) ஆகிய பாடப்பிரிவுகளை கற்றுத்தருகிறார்கள். இவை அனைத்தும் ஓராண்டு படிப்புகள். ஆண்டுக்கு 150 மணி நேரம் பயிற்சியை வழங்குகிறார்கள்.
இந்த படிப்பில் சேர,
1. பத்தாம்வகுப்புமதிப்பெண்பட்டியல்நகல் (COPY OF SSLC MARK STATEMENT)
2. பள்ளி/கல்லூரிமாற்றுசான்றிதழ்நகல்(COPY OF TRANSFER CERTIFICATE)
3. ஆதார்அட்டைநகல் (COPY OF AADHAR CARD)
4. புகைப்படம் (2 PASSPORT SIZE PHOTOS)
5. சாதிசான்றிதழ்நகல் (COPY OF COMMUNITY CERTIFICATE- SC/ST/OBC/EWS)
ஆகியவை மட்டும் இருந்தால் போதுமானது.
இந்த பயிற்சி திட்டத்தில் எப்படி சேர வேண்டும்? என்ற விவரங்களை www.nstiwtrichy.dgt.gov.in என்ற இணையதளத்தின் வழியாக அறியலாம். அதெல்லாம் பார்க்கத் தெரியாது என்றாலும் கவலையில்லை, 0431-2963525, 7045268187,99428 75855, 97518 98925 என்ற எண்களில் தொடர்புகொண்டும் விவரங்களை பெறலாம்.
அப்புறம் என்ன, இப்படி ஒரு அட்டகாசமான வாய்ப்பை நழுவவிடலாமா என்ன? நேரடியாக உங்களுக்கு பயன்படாவிட்டாலும், உங்களது உறவினர்கள், நண்பர்களுக்காவது இந்த தகவல் பயன்படுமே! அவர்களுக்கு எடுத்து சொல்லி இந்த வாய்ப்பை அவர்களுக்கு பரிந்துரைக்கலாமே!











Comments are closed, but trackbacks and pingbacks are open.