திருச்சியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் போராட்டம் !
திருச்சி திருவானைக்காவல் அடுத்த அழகிரிபுரம் பகுதியில் டாஸ்மாக் கடை பார் வசதியுடன் செயல்பட்டு வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டாலும் கடந்த சில தினங்களாகவே அங்கு மது அருந்த வருபவர்களால் பெரிய தொந்தரவு ஏற்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு தொந்தரவு ஏற்படுகிறது., பள்ளி செல்லும் சிறுமிகளுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டி அந்தப் பகுதியில் செயல்படும் மதுபான கடையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என வலியுறுத்தி அழகிரிபுரம் பகுதியை சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும் பொழுது, தமிழ்நாட்டில் பல பகுதிகளில் டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ளது. ஆனால் இந்த கடையும் பள்ளிக்கு அருகிலும் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் உள்ளது. மேலும் போக்குவரத்திற்கு மிக முக்கிய பகுதியாக இந்த பகுதி உள்ளது. இங்கு இந்த மதுபான கடை செயல்படுவதால் பாதுகாப்பற்ற சூழல் உருவாகி உள்ளது. இந்த பகுதியை கடக்கும் பொதுமக்கள் மீது மது அருந்துபவர்கள் ஆபாச வார்த்தைகளில் பேசுவது, அவர்களை தொந்தரவு செய்வது என தொடர்ச்சியாக இடையூறு செய்து வருகிறார்கள். இதனால் எங்கள் நிம்மதியே போய்விட்டது. எனவே உடனடியாக அந்த டாஸ்மாக் கடையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என கூறினர்.
இதையடுத்து கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை வைத்தனர். அவர்களிடம் காவல் துறை துணை மேலாளர் ஞானாமிர்தம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் எப்பொழுது அந்த டாஸ்மாக்களை மூடப்படும் என தெரிவித்தால் மட்டுமே நாங்கள் போராட்டத்தை கைவிடுவோம் எனக்கூறி பெண்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது ஒரு பெண் மயக்கம் அடைந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது அவருக்கு சக பெண்கள் முதலுதவி அளித்தனர்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.