மகாராஷ்டிரா – மும்பை, டெல்லியில் நள்ளிரவில் நடந்தது என்ன..?
மகாராஷ்டிரா – மும்பை, டெல்லியில் நள்ளிரவில் நடந்தது என்ன..?
இரவு 8 மணிக்கு உத்ததேவ் தாக்கரே முதல்வர் என்று சரத்பவார் கூறுகிறார்.
9 மணிக்கு அஜித் பவார் – பட்னாவிஸ் இணைவது உறுதி செய்யப்படுகிறது.
11 மணிக்கு பட்னாவிஸ் டெல்லியில் இருந்த அமித்ஷாவிடம் ஆலோசனை. தொடர்ந்து அமித்ஷா, மோடி ஆலோசனை. நள்ளிரவில் அனைத்துக்கும் ஒப்புதல் வழங்கப்படுகிறது..!
ஆளுனரின் டெல்லி பயணம் ரத்து..!
11.55 மணிக்கு விடிந்ததும் பதவி ஏற்பு என்று முடிவாகிறது.
நள்ளிரவு 1 மணிக்கு குடியரசு தலைவர் ஆட்சியை நீக்கும் பரிந்துரையை ஆளுனர் மத்திய அரசுக்கு அனுப்புகிறார்.
2 மணிக்கு பிரதமர், அமித்ஷா ஆலோசனை.
அவசர காலங்களில் மட்டும் பயன்படுத்தும் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்த முடிவு எடுக்கப்படுகிறது.
அமைச்சரவையைக் கூட்டாமலேயே குடியரசு தலைவர் ஆட்சியை நீக்கும் பரிந்துரை தயாராகிறது.
4.30 மணிக்கு உள்துறை செயலாளர் அலுவலகம் மூலம் குடியரசு தலைவருக்கு பரிந்துரை அனுப்பப்படுகிறது.
5 மணிக்கு அதனைப் பெற்ற குடியரசு தலைவர் 5.10 மணிக்கு ஒப்புதல் அளிக்கிறார்.
5.30 மணிக்கு பட்னாவிஸ், அஜித் பவார் ஆளுனர் மாளிகை வருகிறார்கள்.
5.47 மணிக்கு மதிய அரசு குடியரசுத் தலைவர் ஆட்சியை நீக்கிய மத்திய அரசின் அரசாணை வெளியாகிறது..!
6 மணிக்கு ஏ.என்.ஐ. செய்தி நிறுவன ஊழியர்கள் மட்டும் ரகசியமாக ஆளுனர் மாளிகைக்கு அழைக்கப்படுகிறார்கள்.
7.50 மணிக்கு பதிவி ஏற்பு நடத்தப்படுகிறது.
பதவி ஏற்பு முடிந்த பின்னர் அந்த காட்சிகள் தொலைக்காட்சிகளில் பிரேக்கிங் செய்தியாக ஒளிபரப்பாகிறது..!
பொதுமக்கள், அரசியல் கட்சிகள் ஷாக்..!
8.40 மணிக்கு பிரதமர் வாழ்த்து செய்தி..!
பால் முருகன்