அக்காவை வெட்டிக்கொன்ற தம்பி

0

தஞ்சை புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அரசு ஊழியர் வனிதா மற்றும் அவரது காதலர் கனகராஜ் ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட னர். இதுபற்றி மருத்துவக் கல்லூரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்த காமராஜ் என்பவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததை அடுத்து அவரது மனைவி வனிதா விற்கு வாரிசு அடிப்படையில் அரசு வேலை வழங்கப்பட்டது. வனிதா தனது மூன்று குழந்தைகளுடன் புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஏற்கெனவே திருமணமான கனகராஜ் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டு அவருடன் வசித்து வருகிறார். கனகராஜின் மனைவி மற்றும் குழந்தைகள் திரிவேதிகுடுதியில் வசித்து வருகின்றனர்.

வனிதா தனது சித்தி மகன் பிரகாஷ் என்பவரிடம்2 லட்சம் ரூபாய் பணம் பெற்று 1.5 லட்சம் கொடுத்த நிலையில் மீதமுள்ள 50 ஆயிரம் பணம் கேட்டு பலமுறை அலைந்துள்ளார். வாங்கிய கடனை கொடுக்காததால், தஞ்சை தெற்கு காவல் நிலையத்தில் வனிதா மீது பிரகாஷ் புகார் அளித்ததோடு அனிதாவிற்கு ஏற்கனவே கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை வனிதா மற்றும் கனகராஜ் இருவரும் வெட்டிக் கொல்லப்பட்டனர். கொலை குறித்து தஞ்சை மருத்துவகல்லூரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சம்பவ இடத்திற்கு எஸ்பி மகேஸ்வரன் உள்ளிட்டோர் வந்து பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர்.
பணப் பிரச்சினை காரணமாக பிரகாஷ் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.