காம வெறியர்களிடம்..தவிக்கும் இளம் பெண்கள்..

0

காம வெறியர்களிடம்..தவிக்கும் இளம் பெண்கள்..

நவ-25 அன்று சர்வதேச பெண்கள் வன்முறை ஒழிப்பு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. பெண்கள் பாலியல் வன்முறை, அடக்குமுறை, அடிமைதனம், பெண்ணுரிமை மறுப்பு சமுத்துவமின்மை பாகுப்பாடு போன்றவைகளை ஒழித்து பெண்ணியம் காப்பதற்காக இத்தினமானது கொண்டாடப்பட்டது.

2 dhanalakshmi joseph

இவையனைத்து உரிமைகளும் பெண்களுக்கு கிடைக்கிறதா என்று பார்த்தால் எல்லாம் பேச்சுவழக்காக இருக்கின்றதொழிய நடைமுறையில் பெண்களுக்கு சுதந்திரம் என்பது முழுவதுமாக கிடைக்கப்பெறுவதில்லை, உலகிலேயே அதிக அளவு பெண்கள் கர்ப்பை இழந்த நாடாக நம் இந்தியா விளங்கியுள்ளது. சட்டம் இயற்றப்பட்ட நாட்டிலேயே, சட்டத்திற்கு முரணான தவறுகள் நடப்பதும், அத்தவறுகளை சட்டத்தை வைத்தே வெளிவருவதுமாய் இருந்து வருகிறது. காரணம் சட்டத்தை இயற்ற முடிந்த நாடுகளினால் அதை சரிவர பின்பற்ற முடியவில்லையே என்பது தான்…

இந்தியாவில் கடந்த ஓராண்டுகளில் மட்டும் பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் மாணவிகள் பலர் ஏதோ ஒரு வகையில் கற்பழிக்கப்பட்டு, கொல்லப்பட்டுள்ளார்கள், இதில் ஊடகம் மூலம் வெளிவந்தவை ஒரு புறம் இருந்தாலும், மற்றோரு புறம் வெளியே வாராமல் புதைந்துக்கிடக்கிறது பல. தமிழகத்தில் கடந்த 6 மாத செய்தித்தாள்களை திருப்பி பார்த்தோம் என்றால் ஒவ்வொரு நாளும் ஒரு பெண் பாதுகாப்பின்றி பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி நம் அனைவருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கும்.

- Advertisement -

- Advertisement -

மத்திய அரசு /மாநில அரசு இரண்டும் பெண்களை காப்பாற்றுவோம், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிப்போம் என ஒரு புறம் கூறிக்கொண்டு மாவட்டந்தோறும் பல பெண்குழந்தைகளுக்கான பாதுகாப்பு அமைப்பும், அதிகாரிகளும் செயல்பட்டும் பல குழந்தைகள் பாதிக்கப்படுவது என்பது பெரும் வருத்தத்தை தான் அளிக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் குழந்தைகள் நல அமைப்பு என மாவட்ட ஆட்சித்தலைவரின் கீழ் மாவட்ட குழந்தைகள் நல அலகு, மாவட்ட சமூக நல துறை, குழந்தைகள் நல குழுமம், சைல்டுலைன்(1098), காவல்துறையில் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு, பெண்கள் பாதுக்காப்பு பிரிவு, கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் அரசு சார்பில் குழந்தைகளுக்கான பாதுக்காக்கும் கடமையில் பணியாற்றி வருகின்றனர். குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், பாலியல் துன்புறுத்தல், பாதுகாப்பற்ற நிலையில் வரும் குழந்தைகள் ஆகியோரை மீட்டு பாதுகாப்பு அளிக்கும் முக்கிய அதிகாரிகள் ஆவர்.

சமீபத்தில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்த வழக்கறிஞர் சங்கமித்ரன் மற்றும் பலர் கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்தனர் அதில் கடந்த 6 மாத காலங்களில் நாகை மாவட்டத்தை சுற்றி பல பெண்கள் மர்மமான முறையில் காணாமல் போவதும், பாலியல் துன்புறுத்தலால் இறந்து போவதுமாய் இருப்பதாக புகார் அளித்தனர். மேலும்

இதுதொடர்பாக சங்கமித்ரனிடம் பேசியபோது….

இந்தியாவில் இருக்கும் மாநிலங்களிலே தமிழகத்தில் தான் பெருமளவு பெண்கள் பாதுகாப்பு இல்லாமல் பாதிக்கப்படுவதாக கூறினார். அதுவும் வயது பாரபட்சமின்றி பச்சிளங்குழந்தை முதல் வயது முதிர்ந்த பெண்கள் வரை மனித வடிவில் காம வெறியர்களால் பாதிப்பிக்குள்ளாகின்றனர் என்றார்.
நான் பலமுறை குழந்தைகள் உதவி எண்களான (1098) க்கு குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் பற்றிய தகவல் கொடுத்துள்ளேன். ஆனால் நான் கொடுத்த தகவலுக்கு அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுப்பார்கள் என்றால், அவர்களோ குழந்தை திருமணத்திற்கு கூட சமாதானம் பேசி விட்டு வந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு எந்தவித உதவிகளும் அளிக்கவில்லை. இதனைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் சமூக நல அலுவலகமோ அதில் எந்தவித ஈடுபாடும் காட்டவில்லை…. அதிகாரிகளே எனக்கு ஏண்டா வம்பு னு ஒதுங்கி போறாங்க, அதில் சில அதிகாரிகள் கமிஷன் வாங்கிகிட்டு வேலைய பார்க்குறாங்க இதனால தான் பெரும் சட்டத்தில் இருக்குற ஓட்டைய நல்ல தெரிஞ்சி ஹான் தப்பு செய்றவனும் தப்பு செய்ய ஆரம்பிக்கிறான், கடைசியில் பாதிக்கப்படுறது பாத்தீங்கன்னா ஏதோ ஓர் அப்பாவி பெண்கள் தான்.

சம்பவம் -1

4 bismi svs

சமீபத்தில் நாகை மாவட்டம் தரங்கப்பாடி பொறையார் நெடுவாசல் கிராமத்தில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் ஒரு கிணற்றில் முகம் துணியால் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். வழக்குப்பதிவு செய்து போலீசார் அதன் காரணத்தை கண்டுபிடிக்கவில்லை.

சம்பவம்-2

கேசவன் பாளையத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமுதாய இளம்பெண் கவியரசி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது காரில் சென்றவர்கள் தரதரவென ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டு அதன்பிறகு வீசி எறியப்பட்டார் அவரும் இறந்து விட்டார். இதில் குற்றவாளிகளை இதுவரை போலீசார் கண்டுபிடிக்கவில்லை.

சம்பவம் -3
மயிலாடுதுறையில் கடந்த 11/04/18 தேதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி பிரியதர்ஷினி, பத்தாம் வகுப்பு மாணவி பிருந்தா ஆகியோர் ஆட்டோ மூலம் ரயில் நிலையம் சென்று அங்கிருந்து எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை, இது குறித்து அவர்களது பெற்றோர் பலமுறை காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க அலைந்தும் நீதிமன்றத்தை எந்த முன்னேற்றமும் இல்லை, இந்நாள்வரை கண்டுபிடிக்க முடியவில்லை.

சம்பவம் -4
கடந்த வாரம் சீர்காழி அருகே சித்தன்காத்திருப்பில் பத்தாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டுள்ளார். மணல்மேடு காவல் நிலையம் சித்தமல்லி சேர்ந்த அஜித்தா செம்பனார்கோவில் பகுதியில் காணாமல் போனார் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்படியே விட்டுவிட்டனர்.

சம்பவம் -5
கஞ்சா நகரத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவி காணாமல் போய்விட்டார். செம்பனார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் உள்ளது.

சம்பவம் -6
பரசலூர் ரவிச்சந்திரன் மகள் சிவரஞ்சனி காணவில்லை என்ற வழக்கும் தீர்க்கப்படவில்லை கீழையூர் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவியின் கையில் கத்தியால் கிழித்து உள்ளார். மணல்மேடு அருகே முடிகண்டநல்லூர் ஆதிதிராவிட நல பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் துன்புறுத்தல் அளித்து ஆசிரியர் கைதாகியுள்ளார். இப்படி பெண்கள் மற்றும் இளம் பெண்களுக்கான பாலியல் தொந்தரவு நீடித்துக் கொண்டே போகிறது.

வழக்குகளில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் காணாமல்போன பெண்களை தனிப்படை அமைத்து கண்டுபிடிக்க வேண்டும், குழந்தைகள் இளம் பெண்கள் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் பாலியல் குற்றங்கள் தொடர்பாக உயர்மட்ட அளவிலான பெண்கள் அதிகாரிகளைக் கொண்டு பள்ளி கல்லூரி நிர்வாகங்கள் அதிகாரிகள் கூட்டாக சேர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்திட வேண்டும்.

மேலும் குழந்தைகள் மற்றும் இளம் பெண்கள் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை வழக்கு முடியும் வரை குற்றவாளிகளுக்கு பிணை வழங்கக் கூடாது அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும். கல்லூரிகளில் இளம்பெண்கள் எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பெண் காவல் அதிகாரிகள், சமூக நலத்துறை அலுவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களைக் கொண்டு வகுப்புகளை நடத்த அரசு ஆவண செய்ய வேண்டும். பாலியல் குற்றங்களை கண்காணித்து அதை தடுப்பதற்கு ஒரு தனிப்படை அமைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளை கண்காணிக்க அரசு ஆவண செய்ய வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாகை மாவட்டத்தில் கடந்த 6 மாத காலங்களில் மட்டும் இதுப்போன்ற தொடர் நிகழ்வுகள் நடந்துள்ளது.இதற்க்கு குழந்தைகள் நல அதிகாரிகளோ காவல்துறையோ எந்தவித நடவ டிக்கைகளும் மேற்கொள்ளாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.