ஓதும் இரைச்சலின் நடுவே சுட்டுக் கொல்லப்பட்ட குழந்தைகளின் அலறல்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலிருக்கும் ஒரு ஆரம்பப் பள்ளிக்குள் துப்பாக்கியுடன் சென்ற ஒரு 18 வயதுக்காரன் 18 குழந்தைகளைச் சுட்டுக் கொன்றிருக்கிறான். கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் அமெரிக் காவில் 19000க்கும் மேற்பட்ட துப்பாக்கி வன்முறைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன.
அந்த நாட்டில் யார் வேண்டு மானாலும் கடைக்குச் சென்று துப்பாக்கி வாங்கிக் கொள்ளலாம். துப்பாக்கி உற்பத்தி செய்யும் லாபியைப் பகைத்துக் கொண்டு அங்கு அரசியல் செய்ய முடியாது. அது போல்தான் போர் ஆயுதம் செய்யும் தொழிலதிபர்களின் லாபியும்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

யார் செத்தால் எனக்கென்ன? லாபம்தான் முக்கியம் என்று ஒரு சிறிய முதலாளிகள் கூட்டமும், அது போடும் பிச்சையில் வாழும் ஓர் அரசியல் கூட்டமும்தான் உலகையே ஆட்டுவிக்கின்றன. இதைத்தான் சுதந்திர சந்தை, தனிமனித சுதந்திரம், ஜனநாயகம் என்று பலர் கொண்டாடுகின்றனர். இந்த லட்சணத்தில்தான் உலகெங்கும் பயங்கரவாதச் செயலுக்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்கா கூட்டணிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இதில் இந்தியாவும் இருக்கிறது. சாத்தான்கள் வேதம் ஓதும் இரைச்சலின் நடுவே சுட்டுக் கொல்லப் பட்ட குழந்தைகளின் அலறல் அடங்கிப் போய்விடும். மிகச் சிறிய சவப் பெட்டிகள்தான் மிக அதிக கனமானவை.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

-vijayasankar Ramachandran

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.