கார்கில் போரில் வீரமரணம் அடைந்த மேஜர் சரவணனின் 20-ஆவது ஆண்டு நினைவு நாள்: ஸ்டாலின் நேரில் அஞ்சலி
கார்கில் போரில் வீரமரணம் அடைந்த மேஜர் சரவணனின் 20-ஆவது ஆண்டு நினைவு நாள்: ஸ்டாலின் நேரில் அஞ்சலி
கார்கில் போரில் வீரமரணம் அடைந்த திருச்சியைச் சேர்ந்த மேஜர் சரவணனின் 20-ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
1999ம் ஆண்டு மே மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் என்ற பகுதியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கார்கில் போர் நடந்தது.. இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட இந்த போரில் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் சரவணன் வீரமரணம் அடைந்தார். திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட ராணுவ வீரர் சரவணன் வீரமரணம் அடைந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சரவணனின் படத்திற்கு மாலை அணிவித்தும் – மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினார்.
வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் சரவணனுக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..
இந்நிகழ்வின் போது கழக முதன்மை செயலாளரும் – முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு, எம்.எல்.ஏ., திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.எல்.ஏ., உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.