மேயரிடம் புகார் அளிக்க வந்தவரை மிரட்டிய துணை மேயர் வீடியோ 😡😱
மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மேயரிடம் புகார் அளிக்க வந்தவரை மிரட்டிய துணை மேயர்
மதுரை மாநகராட்சி திருப்பரங்குன்றம் மேற்கு மண்டலத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் மதுரை மேயர் இந்திராணி பொன் வசந்த் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி ஆணையர் சிம்ரன் சித் சின்ஹா, மண்டல தலைவர் சுவிதா விமல் மற்றும் கவுன்சிலர்கள் ஸ்வேதா சத்யன், இந்திராகாந்தி, உசிலை சிவா, வாசு, கருப்பசாமி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
வீடியோ லிங்
இதில் 97வது வார்டு மனை முறையறை திட்டத்தில் விண்ணப்பித்த முத்துவேல் என்பவர் மேயர் இந்திராணி முன்பு துணை மேயர் நாகராஜன் மனை முறையறையை நிறுத்தி வைத்துள்ளார் என்றும் இதுகுறித்து பல்வேறு முறை நேரில் சந்தித்து கேட்டபோதும் மாநகராட்சி அதிகாரிகள் அனுமதி வழங்க துணை மேயர் நாகராஜன் தடையாக உள்ளார் என புகாரளித்தார்.
வீடியோ
அப்போது அதிகாரிகள் முன்னிலையில் மனு கொடுத்த முத்துவேல் மீது வழக்கு தொடருவேன் என்னிடம் கேட்காமல் அதிகாரிகள் விசாரணை செய்யகூடாது என மிரட்டும் பாணியில் பேசியதால் இந்த கூட்டத்தில் சலசலப்பு நிலவியது.