சில நாட்களுக்கு முன் இரவு பேருந்தில் சொந்த ஊருக்கு பயணம் செய்தேன். வழியில் ஓர் கட்டண கழிப்பிடத்திற்கு செல்ல நேர்ந்தது. அனைவரும் வரிசையில் நின்று கட்டணம் செலுத்தி சென்று கொண்டிருந்தார்கள். நானும் உள்ளே சென்றேன். மிக அசுத்தமாக இருந்தது. அருவெறுப்போடு முனகியபடி பெண்கள் பயன்படுத்தியபடி இருந்தார்கள்
யாரும் குரல் கொடுக்க தயாராக இல்லை. நான் வெளியே வந்து கட்டணம் வசூலித்த நபரிடம் கட்டணம் பெறுகிறீர்கள் ஆனால் சுத்தம் செய்ய மாட்டீர்களா என்று கோபமாக கேட்டேன். எல்லோரும் போறாங்கல்ல உனக்கு மட்டும் என்ன என்றான். அவங்க சார்பாவும் தான் கேட்கிறேன் என்றேன்.
அவன் தன் காலடியில் இருந்த உருட்டுக்கட்டையை எடுத்து வேகமாக என்னை அடிக்க வந்தான். ஒரு கணம் அதிர்ந்து அப்படியே நகர்ந்து வந்து பேருந்தில் ஏறி விட்டேன் . நான் இன்னொரு வார்த்தை சொல்லியருந்தால் அடித்திருப்பான். எப்படியோ தப்பினேன்.
அந்த நபருக்கு என்னை தெரியாது.என்னோடு எந்த ஒரு கருத்து மோதலும் கிடையாது. நானும் அடுத்த நாள் காவல்துறைக்கோ, மீடியாவுக்கோ போய் கம்ப்ளெய்ண்ட் செய்யவில்லை. கண்ணை கசக்கவில்லை.
அந்த சண்டை அந்த நேரத்து பிரச்னை. நான் யார் என் பலம் என்ன இதெல்லாம் அந்த நேரங்களில் உதவாது. அன்று அவன் அடித்திருந்தால தெருவோரத்தில் அனாதையாக விழுந்து கிடந்திருப்பேன். எழுத்தாளராவது, புண்ணாக்காவது.. ஒன்றும் இல்லை .
-முகநூலில் ராசாத்தி சல்மா
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.