மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 16
மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 16
தமது 19ஆவது வயதில் ஒரு பத்திரிகையாளனாக அறிமுகமாகி, பத்திரிகைத் துறையிலும், இலக்கியத் துறையிலுமாய் கடந்த 52 ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிற மூத்த முன்னோடிப் பத்திரிகையாளர், எழுத்தாளர் திரு. வை. ஜவகர் ஆறுமுகம் அவர்கள்.
தந்தை பெரியார், காமராஜர், இந்திரா காந்தி, மாபொசி, கலைஞர் மு. கருணாநிதி, எம்ஜிஆர், எம். கல்யாண சுந்தரம், கவிஞர் கண்ணதாசன், சிவாஜி கணேசன் போன்ற அரசியல் மற்றும் கலை ஆளுமைகளை பத்திகையாளராகச் சந்தித்த அனுபவம் உள்ளவர்.
3000த்துக்கும் அதிகமான கட்டுரைகள், அரசியல், நாடகம், நாவல், சுய வரலாறு என இதுவரை மொத்தம் 27 நூல்கள் எழுதியுள்ளார். ‘வெளிச்சத்தில் பூகம்பம்’ இவரது முதல் நூல்.
திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் சங்கம் உள்ளிட்டு திருச்சியில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளில் துடிதுடிப்பாக இயக்குபவர். மூத்த முன்னோடிப் பத்திரிகையாளர், எழுத்தாளர், திரு. வை. ஜவஹர் ஆறுமுகம் அவர்களின் தொண்டறம் நாளும் சிறக்க வாழ்த்துவோம்.
-பாட்டாளி