மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 17

0

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 17

மூத்த கவிஞர். சரளமாகக் கவி புனையும் ஆற்றல் பெற்றவர். மிகச் சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர். திருச்சி மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத் தலைவர், எண்ணற்ற கவிதைகள் எழுதியிருக்கும் மூத்த கவிஞர் அய்யா திரு.வீ. கோவிந்தசாமி அவர்கள்.
நம் திருச்சி மாவட்டத்தின் துறையூர் எரகுடியைச் சேர்ந்தவர். மத்திய அரசில் 5 ஆண்டுகள், தூத்துக்குடி துறைமுகத்தில் 26 ஆண்டுகள், சேது சமுத்திரக் கழகத்தில் 5 ஆண்டுகள் எனத் திறம்படப் பணியாற்றி பணி நிறைவில் இருப்பவர்.
‘என் குரல் ஆயிரம்’ ‘நெஞ்சப் பூக்கள்’ ‘சிந்தனைச் சிறகுகள்’ என இதுவரை 12 நூல்கள் வெளியிட் டிருக்கிறார். தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது உள்ளிட்ட 15 விருதுகளும் மேல் பெற்ற விருதாளர்.
திருச்சியில் 27 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டுவரும் கோவிந் தம்மாள் தமிழ் மன்றத் தலைவர், திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க பொதுச் செயலாளர், இதேபோல எழுதமிழ் இயக்கம் திருச்சி அறிவாளர் பேரவை உள்ளிட்ட அமைப்புகளில் சுற்றிச் சுழன்று பணியாற்றும் தமிழ் ஆர்வலர்.
இந்திய ஒன்றிய அரசின் சேது சமுத்திரத் திட்டத்தின் துவக்க விழாவில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இவர் பங்கு பெற்றது குறிப்பிடத்தக்கவொன்றாகும். மூத்த முன்னோடிக் கவிஞர் அய்யா வீ. கோவிந்தசாமி அவர்கள் மேலும் மேலுமாய் தமிழ்த் தொண்டறம் ஆற்ற நமது வாழ்த்துகளைச் சொல்வோம்.

 

-பாட்டாளி 

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.