கலைஞர் வீட்டின் இன்னொரு பிள்ளை !
கலைஞர் வீட்டின் இன்னொரு பிள்ளை
2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைத்தால், அமைச்சர் பதவி நிச்சயம் என எதிர்பார்க்கப்பட்டவர்களில் ஒருவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. எதிர்பார்த்தபடியே திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அன்பில்மகேஸ், பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைமுறைகளை கடந்த நட்பு
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி குடும்ப நண்பரின் வாரிசு, திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் நெருக்கமான நண்பர் அன்பில் மகேஷ். இது தலைமுறைகளை கடந்த நட்பு. முன்பு கருணாநிதியும், அன்பில் தர்ம லிங்கமும் நட்புடன் பழகி வந்தனர். அந்த நட்பு அவர்கள் மகன்களான ஸ்டாலின் – அன்பில் பொய்யாமொழியிடமும் தொடர்ந்தது.
தற்போது தலைமுறைகளை தாண்டி இளைய தலைமுறையான உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஸ்பொய்யாமொழி வரை தொடர்கிறது. மகேஸின் தந்தை அன்பில் பொய்யாமொழி, துரதிர்ஷ்டவசமாக இளம் வயதிலேயே இறந்து போக, அவரது மகனான அன்பில் மகேஸ், ஸ்டாலின் குடும்பத்தில் இன்னொரு பிள்ளையாகவே மாறிப்போனார். உதயநிதி ரசிகர் மன்றத்தை கவனித்தவர் ஸ்டாலின் வீட்டிலேயே வளர்ந்ததில், உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமான நண்பராக மாறியதில் வியப்பேதும் இல்லை.
கட்சியில் தடம் பதித்த மகேஷ்
ஆரம்பத்தில் நட்பின் அடிப்படையில் உதயநிதியின் ரசிகர்மன்றத்தைக் கவனித்து வந்த அன்பில் மகேஸுக்கு, 2015 ல் திமுகவின் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டது.
திமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளராகவும் இருக்கும் அன்பில் மகேஸுக்கு, 2015 ல் திமுகவின் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. திமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளராகவும் இருக்கும் அன்பில் மகேஸ் 1977ஆம் ஆண்டு, டிசம்பர் 2 ல் பிறந்தவர். எம்சிஏ பட்டதாரி. மிகவும் துடிப்பான இளைஞர்.
தாத்தா அன்பில் தர்மலிங்கம், அப்பா அன்பில் பொய்யாமொழி, பெரியப்பா அன்பில் பெரியசாமி என பரம்பரை திமுக குடும்பம் என்பதால், அரசியல் ரத்தத்திலேயே கலந்த ஒன்று. கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளராகவும் களமிறங்கிய அன்பில் மகேஸ், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கலைச்செல்வனை 16,695 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தார்.
2ம் முறையும் வெற்றி…
இந்த நிலையில், 2021 தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளரை 49,697 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட அன்பில், அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
பள்ளி, கல்லூரி வாழ்க்கை…
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் படித்தவர்… மகேஷ் பொய்யாமொழி, திருச்சிராப்பள்ளி ஈ. ஆர். மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் ஏப்ரல் 2001-ல் திருச்சி ராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரியில் கணினி பயன்பாட்டியலில் முதுநிலைப் படிப்பை முடித்தார். பத்தாண்டுகள் பல்வேறு தகவல் தொழில்நுட்பத் துறைகளில் மென்பொருள் உருவாக்குநராகப் பணியாற்றிய பிறகு, திமுக கட்சியில் சேர்ந்தார்.
இது அரசியல் அல்ல, 3 தலைமுறை நட்பு பொய்யாமொழி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பொய்யாமொழியின் மூத்த மகனும், முன்னாள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) அமைச்சர் அன்பில் ப. தர்மலிங்கத்தின் பேரனுமாவார். இவரது பெரியப்பா அன்பில் பெரியசாமியும் ஓர் அரசியல்வாதி ஆவார்.
திமுக கட்சியின் இளைஞரணி செய லாளரும், சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நண்பர் ஆவார். இரு குடும்பங்களுக்கு இடையே பல சகாப்தங்களாக நீடிக்கும் நட்பு தாத்தா அன்பில் பி. தர்மலிங்கம், மு. கருணாநிதி காலம் தொடங்கி; தந்தையர் அன்பில் பொய்யாமொழி, மு.க.ஸ்டாலின்; இப்போது மகன்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலின் என மூன்று தலைமுறைகளாக அறியப்படுகிறது.
ஹாட்ரிக் எம்எல்ஏ, நம்ம ஊரு அமைச்சர்
2016ம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
திமுகவின் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். 2021ஆம் ஆண்டு ஏப்ரல் ஆறாம் தேதி நடைபெற்ற 16வது தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் திருவெறும்பூர் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். ஆறாவது முறையாக ஆட்சியமைக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைச்சரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 2021 மே மாதம் ஏழாம் தேதி அன்று பதவியேற்றார்.
ரெஸ்பான்ஸ் வந்தது எப்படி?
ஸ்டாலின் குடும்பத் தில் ஒருவரான அன்பில் மகேஷ்க்கு திடீரென பெரிய பதவியை கொடுத்தார் ஸ்டாலின். அவரும் கட்சி பணிகளை சிறப்பாக செய்துவந்தார். தமிழகம் முழுக்க இளைஞரணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கட்சியின் கொடியேற்று விழா மற்றும் ரத்ததான முகாம் என ஸ்டாலின் வந்து செய்யக் கூடிய பணிகளை எல்லாம் மகேஷ் செய்து வந்தார். கட்சி முக்கிய நிர்வாகிகள் மத்தியிலும் இவருக்கு நல்ல ரெஸ்பான்ஸ். ஸ்டாலினிடம் நெருங்க வேண்டும் என்றால் இவரிடம் பழகினால்தான் முடியும் என கட்சி நிர்வாகிகளும் இவரை அணுக ஆரம்பித்தனர்.
கட்சி பணியில் ஆர்வம் வந்தது எப்படி?
கட்சியில் பதவி பெற்ற மகேஷை பாராட்டி அவரது நண்பர்கள் வைத்த பேனர்கள் கருணாநிதி, ஸ்டாலின் வீடுகளுக்கு அருகிலேயே வைக்கப்பட்டதிலிருந்து அவருக்கான முக்கியத்துவத்தை புரிந்துகொண்ட கட்சியினர் கப்சிப் ஆனார்கள். தங்கள் கட்சியின் வழக்கப்படி அவரிடம் நெருங்க ஆரம்பித்தார்கள். அவர் படுப்பது, தூங்குவது தவிர மற்ற எல்லா விஷயங்களுக்கும் இளைஞரணியினர் போஸ்டர் அடித்து புல்லரிக்க வைத்தனர். அதுவரை கட்சி ஈடுபாடு இல்லாமல் இருந்த மகேஷ், பின்பு கட்சிப் பணிகளில் ஆர்வம் காட்டினார்.
யார் திமுகக்காரன்
பேச்சில் வல்லவர் மகேஷ் பொய்யாமொழி, அவர் ஒரு மேடையில் பேசும் போது, திராவிட முன்னேற்ற கழகத்தில் நான் அந்த பொறுப்பில் இருக்கின்றேன். இந்த பொறுப்பில் இருக்கின்றேன்’ என்று கூறுவதைக் காட்டிலும், ‘நான் திராவிட முன்னேற்ற கழகத்தில் ஒரு தொண்டனாக இருக்கின்றேன்’ என்று சொல்வதில் பெருமை கொள்பவன் தான் திமுககாரன் என்றார். நாங்க சிங்கம், ஆட்டுக்குட்டிகளுக்கு பதில் சொல்ல தேவையில்லை திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டங்களின் பேசுபவர்களிடம் சொல்லிக்கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்று தான்.
ஆட்டுக்குட்டி அண்ணாமலை…
இது சிங்கங்களின் கூட்டம், ஆட்டுக் குட்டிகளுக்கெல்லாம் இங்கு நாம் பதில் கூறிக் கொண்டு நேரத்தை வீணாக்க வேண்டிய அவசியமில்லை. எவரும் தொட முடியாத உயரத்தில் நமது முதலமைச்சர் ஸ்டாலின் அடுத்தடுத்த சாதனைகளைப் படைத்து மிகமிக விரைவாக பயணித்துக் கொண்டு இருக்கின்றார் என்று பேசி அண்ணாமலை பற்றி நக்கலடித்தவர்.
குழந்தையாய் மாறி விடும் மகேஷ்
அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒரு விழாவில் பேசும் போது, புதிய உத்வேகத்துடன் செயல்பட அரசு வழங்கும் விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடைகள், மடிக்கணினி, கல்வி உபகரணங்கள், புத்தகப் பை, முட்டையுடன் கூடிய சத்தான மதிய உணவு, மிதிவண்டி, கட்டணமில்லாப் பேருந்து வசதி, உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதாந்திர ஊக்கத் தொகை மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் மகத்தான திட்டம் உள்ளிட்ட அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அனைத்துக் குழந்தைகளும் முழுமையாக பயன்படுத்தி தங்களை மேம்படுத்தி சமுதாய வளர்ச்சிக்கு வித்திட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
கூவும் குயில்களாகவும், ஆடும் மயில்களாகவும், கல்வி வானில் சிறகடிக்கும் சுதந்திரப் பறவைகளாகவும் “மாணவப் பருவம் மாணவருக்கே, குழந்தைப் பருவம் குழந்தைகளுக்கே” என்பதை உறுதி செய்திடும் வகையில், குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலும் அகற்றிட நமது சிறந்த கல்வி முறையினை பயன்படுத்தி ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கிட குழந்தைகள் அனைவரும் பள்ளிக்கு வாருங்கள் என அன்புடன் இருகரம் நீட்டி அழைக்கின்றேன் என்றார்.
உதயநிதியே அடுத்த தமிழ்நாடு.. கலக்கல் பேச்சில் மகேஷ் பொய்யாமொழி
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், சேகர்பாபு கலந்து கொண்டனர். திருவல்லிக்கேணி எம்எல்ஏவும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொண்டாடப்பட்டது.
தமிழ்நாட்டில் பல பகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி துறைமுக தொகுதியில் உள்ள 310 கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், சேகர் பாபு மற்றும் தயாநிதி மாறன் எம்பி ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், “இங்கு இந்தி மொழியைத் திணிக்கச் சிலர் முயல்கின்றனர். அது நடக்காது. திமுக இளைஞரணி செயலாளர் இந்தி திணிப்புக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.. அது சரி இரு மொழிக் கொள்கை பற்றி கருணாநிதியின் பேரன் பேசாமல் வேறு யார் பேசுவார். திமுக என்பது வெறும் அரசியல் கட்சி இல்லை. இது மக்கள் இயக்கம். மக்களைக் காக்கத் தொடங்கப்பட்ட இயக்கம்.
பொதுமக்களுக்குத் தேவையானவற்றைச் செய்து தருவது தான் எங்கள் வேலை. கருணாநிதியை பொறுத்தவரை அவருக்கு அனைவரும் ஒன்று தான். கடைக்கோடி தொண்டரையும் ஒரு மாதிரி தான் பார்ப்பார். உதயநிதிக்கு இளைஞர் அணி செயலாளர் பதவி தர வேண்டும் என நாங்கள் முதலில் சொன்ன போது, தலைவர் ஸ்டாலின் உடனடியாக அதை ஏற்றுக்கொள்ளவில்லை. முதலில் தேர்தலில் பிரசாரம் செய்யட்டும் அதன் பிறகு பார்க்கலாம் என்றே முதலில் சொன்னார்.
உதயநிதி என்றாலே உழைப்பு, உடன்பிறப்பு, உயர்வு தான். பொதுவாக உதயநிதியை சந்திப்பதே கடினம். இருப்பினும், மாணவர்கள் அல்லது இளைஞர்களுக்கான நிகழ்ச்சி என்றால், உடனே அவர் அனைத்து வேலையையும் விட்டுவிட்டு வருவார்.
இளைஞர்களுக்கும் மாணவர்களுக்குமான திட்டங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். இளைஞர்களே அடுத்த சமுதாயம் என்று பொதுவாகச் சொல்வார்கள். அப்படித்தான் எங்கள் இளைஞரணி செயலாளர் உதயநிதியே அடுத்த தமிழ்நாடு என்று சொல்லும் நிகழ்வு இது” என்றார்.