ராமஜெயம் கொலை வழக்கு ! 13 ரவுடிகள் மீதான சோதனைக்கு நாள் குறித்த சிறப்பு புலனாய்வு ! போலிஸ் !
ராமஜெயம் கொலை வழக்கு ! ரவுடிகள் மீதான உண்மை அறியும் சோதனைக்கு நாள் குறித்த சிறப்பு புலனாய்பு போலிஸ் !
அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் 2012 ஆம் ஆண்டு நடைபயிற்சியின் போது கடத்தப்பட்டு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். கல்லணை – பொன்னிடெல்டா பகுதியில் சாலையில் உள்ள காவிரிக் கரையோரம், கை, கால்கள் இரும்புக் கம்பி மற்றும் பிளாஸ்டிக் டேப் மூலம் கட்டப்பட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. கொலை நடந்து கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இதுவரை தனிப்படை, சிபிசிஐடி, சிபிஐ என பலதரப்பு போலீஸ் விசாரித்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் சிறப்பு புலனாய்வு போலிசுக்கு மாற்றப்பட்டது. எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் டிஎஸ்பி மதன் கண்காணிப்பில் 40 பேர் கொண்ட சிறப்பு போலிசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் நடந்த பல்வேறு கொலை சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடிகள் மற்றும் ராமஜெயம் கொலை சம்பவம் நடந் தபோது திருச்சியில் முகாமிட்டிருந்த ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
அதில் தமிழகத்தின் பிரபல ரவுடிகள் சாமிரவி, திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன், மாரிமுத்து , சீர்காழி சத்தியராஜ், தினேஷ், திலீப் என்கிற லட்சுமி நாராயணன், தென்கோவன் என்கிற சண்முகம், ராஜ்குமார், சிவகுணசேகரன், சுரேந்தர், மயிலாடுதுறை கலைவாணன் உள்ளிட்ட 13 பேர் மீது உறுதிபடுத்தப்படாதா சந்தேகம் எழுந்த நிலையில் இந்த பட்டியலில் உள்ளவரிடம் உண்மை கண்டறியும் பரிசோதனை நடத்த திருச்சி மேஜிஸ்ட்ரேட் கடந்த மாதம் அனுமதி அளித்தார்.
உண்மை கண்டறியும் பரிசோதனை எப்போது நடத்தப்படும் என்ற கேள்வி தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருந்தது. இந்த விசாரணையும் அவ்வளவு தானா என்கிற கேள்வி தொடர்ந்த நிலையில் தற்போது…. 13 பேரிடமும் நாளை 17ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை சென்னையில் உள்ள தடவியல் துறை அலுவலகத்தில் அரசு நிபுணர்கள் முன்னிலையில் உண்மை கண்டறிய பரிசோதனை நடத்தப் போவதாக சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சிறப்பு சம்மன் தனிப்பட்டமுறையில் அனுப்பி உள்ளனர்.
உண்மை அறியும் பரிசோதனை முடிவில்… அறிவியில்ரீதியாக குற்றவாளிகள் யார் என்பது தெரியவரும் பரிசோதனை முடிவுகள் இந்த மாத இறுதிக்கும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணைக்கு நகரும். அதில் அமைச்சர் நேருவின் குடும்பத்தினர் சிலரிடம் இந்த சோதனை நடத்த வாய்ப்பு இருப்பதாக விசாரணை போலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.