கோலாகலமாக தொடங்கிய உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி – படங்கள்

0

கோலாகலமாக தொடங்கிய உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டு தைத்திருநாளில் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமர்சையாக கோலாகலமாக நடைபெறும். குறிப்பாக,அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.

https://businesstrichy.com/the-royal-mahal/

அந்த வகையில் முதல் போட்டியான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று 15.01.2023  கோலாகலமாக துவங்கியது, இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் ஆன்லைன் முறையில் முன் பதிவு செய்யப்பட்டு ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட காளைகள் 300க்கும் மேற்பட்டமாடுபிடி வீரர்கள் 15 மருத்துவ அணியினர் 13 கால்நடை குழுவினர் பங்கு பெறுவார்கள்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது அதன் அடிப்படையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது காளைகளை பொருத்தமட்டில் நான்கு பற்கள் முளைத்திருக்க வேண்டும் நான்கடி உயரம் இருக்க வேண்டும் ரொம்ப கூர்மையாக கொம்பு இருக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

காயங்கள் ஏதேனும் முழுமையான உடல் பரிசோதனைக்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டிக்குமாடு பிடி வீரர்கள்அனுமதிக்கப்படுவார்கள். குறிப்பாக நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் இருக்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகள் உள்ளது.

இந்த நிலையில் நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றதோடு மாவட்ட ஆட்சியர் ,அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் போட்டி துவங்கியது. போட்டியில் ஒவ்வொரு சுற்றுக்கும் 25 மாடுபிடி வீரர்கள் களம் இறக்கப்படுவார்கள்காலை 8 மணிக்கு துவங்கப்பட்ட இந்த போட்டி மாலை 4 மணி வரை நடைபெறும்.

களத்தில் மாடுபிடி வீரர்கள் மாட்டை பிடித்துக் கொண்டு50 மீட்டர் தூரம் செல்ல வேண்டும்வால் மற்றும் கால்களை பிடிக்கக் கூடாது இப்படி சரியாக காளையை படிப்பவர்கள் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்கள். காளையை யாரும் பிடிக்காமல் மாடு தப்பி சென்றால் மாடு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

வெற்றி பெறும் மாடுபிடி வீரர் மற்றும் காளைக்கு சைக்கிள், குத்துவிளக்கு,அண்டா,மிக்சி, குக்கர்,பித்தளை பானைகள்,தங்க காசு,இருசக்கர வாகனம்,கார், ரொக்க பணம் என பரிசு பொருள்கள் வழங்கப்படும். ஜல்லிக்கட்டு போட்டியில் பாதுகாப்பு பணிக்காக மதுரை மாநகர காவல் ஆணையாளர் தலைமையில் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

காளைகள் மருத்துவ பரிசோதனைக்காக 50க்கு மேற்பட்ட மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர்கள் முதலுதவி குழுவினர்கள் தயாராக உள்ளனர். மாடுபிடி வீரர்களுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால் மருத்துவ குழுவினர்கள் 10 ஆம்புலன்ஸ் வசதிகள் தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி முடிந்த பின்நாளை பாலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டியும் அதனைத் தொடர்ந்து உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாகுல்.
படங்கள்: ஆனந்த்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.