கபடி வீரரின் கடைசி மூச்சு… கண் கலங்கிய வீரர்கள்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கபடி வீரரின் கடைசி மூச்சு… கண் கலங்கிய வீரர்கள்

கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் சத்தியமங்கலம் பஞ்சாயத்து பகுதி கணக்கப் பிள்ளையூரில் 8ம் ஆண்டு கபடி போட்டி ஊர் பொது மக்கள் சார்பாக கடந்த 19ம் தேதி நடைபெற்றது. இதில் 53 அணிகள் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து கலந்துகொண்டன. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம் பாறை தாலுகா பாளையம் பகுதி காச்சக்காரம்பட்டி கிராமத்தை சேர்ந்த கபடி குழுவைச்சேர்ந்த 11 பேர் கணக்கப்பிள்ளையூருக்கு விளையாட வந்திருந்தனர்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

மாணிக்கம்(26)
மாணிக்கம்(26)

இந்த குழுவில் ஒருவராக மாணிக்கம்(26) இருந்தார். இவர் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் டிப்ளமோ படித்துள்ளார். இவரது தந்தை தங்கவேல் இறந்ததையடுத்து கூலி வேலைசெய்து தாய் மாரியம் மாள் மாணிக்கத்தை படிக்க வைத்துள்ளார். கபடியில் ஆர்வம் உள்ள மாணிக்கம் பல மாவட்டங்களில் நடந்த கபடி போட்டியி ல்பங்கேற்று வென்று கோப்பைகளை பெற்று தங்கள் கிராமத்திற்கு பெருமை சேர்த்தவர்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

இந்நிலையில் குளித்தலை அடுத்த சத்திய மங்கலம் ஊராட்சி கணக்கப்பிள்ளையூரில் பொதுமக்கள் சார்பில் 8வது ஆண்டாக கபடி போட்டி கடந்த 19ம் தேதி நடப்பதாக அறிவித்திருந்தனர். இதில் விளையாடுவதற்க்காக 53 அணிகள் பல்வேறு பகுதி களில் இருந்து வந்திருந்தனர். காச்சக்காரன்பட்டி கிராமத்தில் இருந்து வந்த 11 பேர் அடங்கிய டீமில் மாணிக்கமும் ஒருவர். சிறப்பாக விளையாடும் வீரர் என்ற பெருமைக்குரியவரான மாணிக்கம் விளையாடுவதைசக வீரர்கள் மட்டுமின்றி எதிர் அணியனரை திக்குமுக்காடச் செய்யும் வீரராக இருந்தது அனைவரையும்கவர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி நேர்மையாகவும் விளையாடும் குணம் கொண்டவராகவும் இருந்துள்ளார்.

மாணிக்கம் குழுவினர் முதல் 2 சுற்றுகளில் வென்றதற்குபிறகு 3வது  சுற்றான இறுதி சுற்றில் விளையாட இருந்த நிலையில், அப்போது இரவு 10 மணி. சக வீரர்களை உணவருந்துமாறு கூறிய மாணிக்கம், தான் மட்டும் உணவருந்தவில்லை. எனக்கு வாந்தி வருவது போன்று இருக்கிறது.. நீங்கள் சாப்பிடுங்கள் என்று கூறியவாறு மயங்கி கீழே சரிந்தார். இதை எதிர்பாராதசக வீரர்கள் அவரை தாங்கி பிடித்து அருகாமையில் உள்ள அய்யர்மலை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். உள்ளூர்வாசிகளும் உடன்வந்து உதவினர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

மாணிக்கத்தை பரிசோதித் செவிலியர்கள் அவரை குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூற.. குளித்தலையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வரும் போது மணி இரவு பத்தரையை தாண்டியது. அங்கு இரவு டூட்டியில் இருந்த மருத்துவ குழுவினர் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக சொன்ன அதிர்ச்சி தகவல் மின்னல் வேகத்தில் பரவ, கணக்கப் பிள்ளையூரில் நடந்த விளையாட்டு போட்டியை நிறுத்தியது விழா குழு.

சவக்கிடங்கிற்கு சென்றது மாணிக்கத்தின் உடல்! உடற்கூறு ஆய்விற்காக… இரவு முழுவதும் காச்சக்காரன்பட்டி கிராம மக்க ளுடன், விழா உள்ளூர்வாசி களும்.. அங்கேயே! மறுநாள் 21 ம் தேதி திங்கட்கிழமை காலை முதற்கொண்டே சோகமே உருவானநிலையில் அனைவரும். மாலை 3 மணியளவில் உடற்கூறு ஆய்வு முடிந்தது. உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப் பட்டது. முன்னதாக கணக்கப் பிள்ளையூர் விழா குழுவினர் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு வழங்குவதற்காக வைத்திருந்த கோப்பை மற்றும் சிறு தொகையையும் மாணிக்கத்திற்கு இரங்கல் தெரிவித்து சமர்ப்பணம் செய்தனர்.   காச்சக்காரன்பட்டி நோக்கி கபடி வீரர் மாணிக்கம் உடலை சுமந்து வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தின் பின்னால் கனத்த இதயத்தோடு, கலங்கிய கண்களோடு கபடிவீரர்கள்.

விளையாட்டாக செய்யாதே விபரீதத்தில் முடியும் என்கிறது கிராமத்து பழமொழி ! விளையாட்டு என்று வந்துவிட்டால் விபரீதங்கள் உண்டு தான்! இதனை யாவரும் அறியாமல் இருக்க முடியாது. அதிலும் போட்டி என்று வந்துவிட்டால்.. விபரீதங்கள் தடுக்க முடியாத ஒன்றாக அல்லவா ஆகிவிடுகிறது. எத்தனை சட்ட திட்டங்கள் அதனுள் இருந்தாலும்! அதற்கெல்லாம் தயாராகதானே ஆடுகளத்திற்கு ஒருவன் வரமுடியும்! அதிலும் அனுபவம் உள்ள ஒருவனுக்கு இது பற்றி சொல்ல தேவை இருக்காது.

சும்மா வந்திடுமா ‌சுவைக்க வெற்றி? போராட வேண்டுமல்லவா? வீரர்களே நீங்கள் போராடுங்கள் அதே நேரத்தில் உங்கள் உடல் நலத்தையும் பேணுங்கள்! வீரம் மிகுந்த போட்டியாளனுக்கும் நாம் சொல்ல வேண்டிய கடமை அங்குசத்தின் வாயிலாக… இது உடல்நலம் பேணுகிற ஒரு கட்டுரையாக அமைய எண்ணுகின்றேன்!

நன்றி

 

– நௌசாத்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.