ஜில்லுன்னு சினிமா!

0

ஜில்லுன்னு சினிமா!

யாராவது சான்ஸ் கொடுங்கப்பா … 
எஸ்.ஏ.சி.யின்  ‘சட்டபடி குற்றம்” மூலம் கோலிவுட்டில் எண்ட்ரியானவர் கோமல் சர்மா. சுரேஷ்காமாட்சியின்‘ நாகராஜசோழன்,  ஆர்.கே.வின் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படங்களில் நடித்தும் தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் கதவைத் தட்டாததால் மலையாளக் கதவைத் தட்டினார் கோமல்சர்மா.

ஸ்ரீ சத்யா புரோமோட்டர்ஸ்

பிரியதர்ஷனின் ‘மரைக்காயர்’ படத்தில் நடித்தபிறகு, அங்கேயே கண்டினியூ பண்ணினார். அப்படியும் தமிழில் சான்ஸ் கிடைத்தபாடில்லை.இதையெல்லாம் நமது அங்குசம் இதழில்,கடந்த ஒரு வருடத்தில் மூன்று முறை செய்தி வெளியிட்டுவிட்டோம்.

- Advertisement -

ஆனாலும் ‘ஹைட், ‘வெயிட்,’ பிரைட்’ மூன்றையும் மொத்தமாக வைத்திருக்கும் கோமலுக்கு, இரண்டு தமிழ் படங்களில் நடித்து முடித்தும் ரிலீசாகவில்லை.கையில் வைத்திருக்க படங்களும் இல்லை. இதனால் கோமல் சர்மாவி ன் போட்டோஷூட்டுகளாக ரிலீஸ் பண்ணிக்கொண்டிருக்கிறார் அவரது பி.ஆர்.ஓ. அண்ணன் ஜான்.

சமீபத்தில் மாலத்தீவுக்குப்போய் செம ஜில்னெஸ்ஸாக கோமல்சர்மா எடுத்த போட்டோ ஷூ ட் ஸ்டில்சை இந்த வாரத்தில் மட்டும் இரண்டு ரிலீஸ் பண்ணியிருக்கார் ஜான். யாராவது கோமல்சர்மாவுக்கு நல்லசான்ஸ் கொடுங்கப்பா , புண்ணியமாப்போகும்.

4 bismi svs

அடுத்த ரிலீஸ், கோமல்சர்மா நடிக்கும் படங்களின் நியூஸ் ரிலீசா அனுப்புங்க ஜான் அண்ணே.

அதே ஸ்லிம்! அதே கிளாமர்!  
மும்பையிலிருந்து ஆந்திரா வழியாக தமிழ் சினிமாவுக்குள் வந்தவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விக்ரம், ஜெயம் ரவி , தனுஷ், ஜீவா , ‘வைகைப்புயல்’வடிவேலு ஆகியோருக்கு ஜோடி போட்டு பத்து பன்னிரெண்டு படங்களி ல் நடித்தார். 2018ம்ஆண்டு  ரஷ்யாவைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ஒருவரை கல்யா ணம்செய்து கொண்டு பார்சிலோனாவில் செட்டிலாகி , ஒரு பெண்குழந்தைக்கும் தாயானார்.


இப்போது கணவரின் ‘நல்லாசி’யுடன் மீண்டும் சினிமாவுக்குள் எண்ட்ரியாகியிருக்கிறார்.   உபேந்திரா , கிச்சா சுதீப்நடித்து கன்னடத்தி ல் தயாராகி , பான்இந்தியா படமாக ரிலீசாகவுள்ள ‘கப்ஜா ’ மூலம் களம் இறங்கியுள்ளார் ஸ்ரேயா. 15  வருடங்களுக்கு முன்பு ரிலீசான ரஜினியின்‘ சிவாஜி ’யி ல் பார்த்த அதே ஸ்லிம், அதே கிளாமருடன் இருக்கார் ஸ்ரேயா.

 நயன்-சிவன் மார்க்கெட் அவுட்டா ? 
டைரக்டர் விக்னேஷ் சிவன், அவரது படங்களின் மூலம் பிரபலமானதை விட, நயன்தாராவால்தான் அதிகம் பிரபலமானார். பல வருட‘கோயிங் ஸ்டெடி’ லைஃப்ஃபுக்குப்பிறகு கடந்த ஆண்டு நயனும் சிவனும் திருமணம் செய்து கொண்டனர் நயன், சிவன் விசயத்தில் இருவருக்குமே கல்யாணத்திற்குப் பிறகு எந்த சான்ஸு ம் கதவைத் தட்டவில்லை . ஷாருக்கானுடன்  நயன் ஜோடி போடும் ‘ஜவான்” படம் கூட கல்யாணத்திற்கு முன்பு கமிட்டானதுதான். இதுல விக்னேஷ்சிவனின் நிலையோ ரொம்ப பரிதாபம். லைக்கா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் டைரக்‌ஷனில் அஜீத் நடிப்பதாக, ‘துணிவு” ரிலீசுக்கு முன்பே அதிகாரப்பூர்வமாக விளம்பரம் ரிலீசானது.


ஆனால் ‘துணிவு’ரிலீசுக்குப் பின் அஜீத்தின் மனநிலை மாறியதால், விக்னேஷ் வேண்டாம்எனச் சொல்லி விட்டார். நயன்தாராவே அஜீத்திடம் பேசிப்பார்த்தும் பிரயோஜனமில்லை . இதனால் ரொம்பவே நொந்து நொம்பலமான விக்னேஷ் சிவன், அஜீத்துக்கு சொன்ன கதையை விஜய்சேதுபதிக்கு சொல்லி ஓகே வாங்கி விட்டதாக நியூசைக் கசியவி ட்டுள்ளார். ஆனால் வி.சே,தரப்பிலிருந்து இன்னும் கன்ஃபார்ம் நியூஸ் வரவில்லை.


இதுவும் சரிப்பட்டு வரலேன்னா மனைவி நயனுக்கா க வெயிட்டான ஹீரோயின் சென்ட்ரிக் கதையை செட் பண்ணி , ஜெயிக்கலாம் என நினைக்கிறார் விக்னேஷ் சிவன். இதெல்லாம் நடக்குற காரியமா சிவனே ? லைக்கா -& அஜீத் காம்பினேஷன் படத்தின் டைரக்டராக இப்போதைக்கு மகிழ்திருமேனி இருக்கிறார்.இதுவும் எப்போது வேண்டுமானாலும் மாறலாம். அதுவும் மாறாமல் இருக்கலாம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.