தூங்கா நகரில் துணிகரம்… டன் கணக்கில் கஞ்சா கடத்தல் விரட்டி பிடித்த தனிப்படை!
தூங்கா நகரில் துணிகரம்… டன் கணக்கில் கஞ்சா கடத்தல் விரட்டி பிடித்த தனிப்படை!
மதுரையில் புகையிலை விற்றவருக்கு இட்லி கடை, பள்ளி கல்லூரி சிறார்களுக்கு கஞ்சா விற்பனை செய்தவருக்கு சைக்கிளில் உப்பு வியாபாரம், திருநங்கைக்குமருத்துவ உபகரணங்கள் என மதுரையில் காவல்துறையினர் அசத்தி வந்த வேளையை நமது அங்குசம் இதழில் நல்ல பழக்கத்திற்கு கட்டவுட்…போதை பழக்கத்திற்கு கெட் அவுட்...என்ற தலைப்பில் காவல்துறையினர் பற்றி கடந்த ஜனவரி மாதத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த செயலைபொதுமக்களும், சக காவலர்களும், சமூக ஆர்வலர்களும் காவல்துறையினரை பாராட்டி வந்தனர்.
சமீபத்தில் மதுரை புறநகரில் கஞ்சாவை விற்கும் வியாபாரிகளிடமிருந்துமூட்டை, மூட்டையாக கஞ்சா பிடிப்பட்டது. மதுரை எஸ்பி., உடனடியாக உத்தரவை ஒன்றை பிறப்பித்தார்.கஞ்சாவை யார் விற்கிறார்களோ, அவர்களுடைய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவது மட்டுமல்லாமல்அவர்களுடைய உறவினர்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும் என திடீர் உத்தரவால் சிறிது காலம் மதுரையில் கஞ்சா புழக்கம் இல்லாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த பிப்.15ம் தேதி அன்று எஸ்.எஸ்.காலனிகாவல் நிலைய இன்ஸ்பெக்டர் பூமிநாதனுக்கு, கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டபோது ஆந்திராவிலிருந்து, விஜயவாடா, சென்னை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு கடத்தப்பட இருந்தது தெரியவந்தது.கஞ்சாவை கடத்தி வந்த லாரியில் இருந்து நால்வரில் 2 பேர் தப்பி ஓட முயன்றபோது அவர்களைபிடித்து விசாரித்ததில், லாரியில் ஆயிரம் கிலோ (ஒரு டன்) கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது.
விசாரித்தபோது, அவர் மதுரை மேலமாசி வீதியை சேர்ந்தபிரபாகரன் மற்றும் கோவை செந்தில் பிரபு எனவும் லாரியில் வந்த நால்வரில் இருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை மதுரை மாநகர் போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் மற்றும் துணை கமிஷனர், உதவி கமிஷனர் உத்தரவின் பேரில் எஸ்எஸ் காலனி இன்ஸபெக்டர் பூமிநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தப்பி ஓடிய ராஜ்குமார், ஜெயக்குமார் ஆகியஇருவரையும் தனிப்படை போலீசார் தேடி பிடித்துள்ளனர், இவர்களின் செயலை பாராட்டி சமூக ஆர்வலர்களும், சகபோலீசாரும், பொதுமக்களும் எஸ்.எஸ்.காலனி இன்ஸ்பெக்டர் பூமி நாதனை பாராட்டினர்.
என்கவுண்டர் எக்ஸ்பர்ட்
இது பற்றி போலீசார் ஒருவரிடம் நாம் கேட்டபோது, சிவகங்கைமாவட்டத்தில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்,2008ல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் புதிதாக எஸ்ஐ பதவி பெற்று 2019ல் பதவிஉயர்வுடன் சிவகங்கை மாவட்டத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தபோது மருது பாண்டியர்கள்குருபூஜைக்கு சென்றவர்கள் ரோட்டில் சண்டை போட அங்கு பாதுகாப்பு பணிக்காக வந்திருந்தஉயர் அதிகாரியை சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பிரபு, பாரதி ஆகிய இருவரும் தாக்கினார்கள்.அருகில் பாதுகாப்பு பணியில் இருந்த எஸ்ஐ.,ஆல்வின் இதை தட்டி கேட்டவுடன் அவரையும் கொலை செய்துவிட்டு தலைமறைவாகினர், இருவரும் சிவகங்கை காட்டுப் பகுதியில் ஒளிந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைக்கிறது. இருவர் மீதும் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், வழிப்பறிஎன 50க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளனர். இன்ஸ்பெக்டர் பூமிநாதன் நேரில்சென்று அவர்கள் இருவரையும் என்கவுண்டர் செய்தார்.
அதேபோல் மற்றொரு சம்பவம்…
கார்த்திகை சாமி என்ற ரவுடி இவன் மீதும் சிவகங்கை மாவட்டம் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் கொலை,கொள்ளை என பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இவன் திருடப் போகும் வீட்டில் உள்ளபொருட்களை எடுத்துவிட்டு அங்குள்ள பெண்களை கற்பழிப்பது, பிறகு கொலை செய்வது என இதைஒரு தொழிலாக செய்து வந்துள்ளான், இவன் கூத்தியார்குண்டு பெட்ரோல் பங்க்கிலும் ஊழியர்மற்றும் திருமங்கலம் டோல்கேட்டிலும் அங்கு பாதுகாப்பு பணிக்கு இருந்த போலீசார் இருவரையும்அரிவாளால் தாக்கி உள்ளான். மேலதிகாரிகளியின் உத்தரவின் பேரில் அவனையும் இவர் என்கவுண்டர் செய்துள்ளார்.
அதன் பிறகு சிவகங்கையில் இருந்து மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்திற்கு மாற்றலாகி வந்து குட்கா, புகையிலை கடத்துபவர்களை பிடித்தார். அங்கு இருந்த போது 2 சமுதாயத்தினருக்கு இடையே மோதல்கள் வர இருவரையும் சமரசம் செய்து பார்த்ததில் ஒத்து வரவில்லை என்றும், வழக்குப்பதிந்தார். காவல் நிலையத்தை ஒரு சமுதாயத்தை சார்ந்த ஆண்கள், பெண்கள் என அனைவரும் முற்றுகையிட்டனர்.

எதையும் கண்டு கொள்ளாமல் தைரியமாக அவர்கள் மீது வழக்குப்பதிந்துநீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார், இச்செயலையை அப்போது இருந்த மதுரை மாநகர் போலீஸ்கமிஷனர் டேவிட் ஆசீர்வாதம், நேரடியாக பூமிநாதனை அழைத்து பாராட்டியும் உள்ளார்.
அண்ணாநகரில் குற்றம் செய்யும் ரவுடிகள் பூமிநாதனை கண்டதும் ஓடி ஒளிந்து வெளி மாநிலங்களுக்குசென்றுவிட்டனர், அதற்குப் பின்பாக தற்போது எஸ்,எஸ், காலனி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார் வாகன சோதனையில் ஒரு டன் கஞ்சாவை பிடித்து குற்றவாளிகளைகைது செய்ததை மதுரை மாநகர் போலீஸ் கமிஷனர் நரேன் நாயர் பாராட்டி முதல்வர் பதக்கத்திற்கும் பரிந்துரை செய்திருக்கிறார். இன்ஸ்பெக்டர் பூமிநாதனுக்கு விரைவில் முதல்வர் பதக்கம் வழங்க இருப்பதாக போலீசார் கூறி வருகின்றனர்.
இதை பற்றி எஸ்டிபிஐ கட்சியின் மதுரை மண்டல தலைவர் முஜிபுர் ரஹ்மான் கூறுகையில், மதுரையில் மாநகர் மற்றும் புறநகரங்களில்அதிகமாக கஞ்சா விற்பவர்களை காவல்துறையினர் மிக கச்சிதமாக பிடித்து குற்றவாளி களுக்கு தண்டனை வழங்கி வருகின்றனர். இது வரவேற்கத்தக்க செயலாகும். பாராட்டுகின்றேன் என்றார்.
போதைப் பழக்கங்களுக்கு தமிழகத்தில் எத்தனையோ மருத்துவர்கள் மறுவாழ்வு மையங்கள் இருந்தாலும்அதை பயன்படுத்துபவர்கள் தானாக புரிந்துகொண்டு நிறுத்தினால் மட்டுமே இதை ஒழிக்க முடியும்என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்
– ஷாகுல், படங்கள்: ஆனந்த்