தொழிலதிபர்களிடம் வசூல்வேட்டை ஆளுங்கட்சி ஆதரவுடன் எதிர்கட்சி பிரதர்ஸ்!
தொழிலதிபர்களிடம் வசூல்வேட்டை ஆளுங்கட்சி ஆதரவுடன் எதிர்கட்சி பிரதர்ஸ்!
மலைக்கோட்டை மாநகரில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத வணிக வீதியில் கடை விதித்திருக்கும் பெரும் தொழிலதிபர்களே மிரளும் வகையில் உள்ளுர் பொறுப்பில் இருக்கும் சகோதரர்களின் அட்ராசிட்டி எல்லை கடந்து போவதாக புலம்பித் தீர்க்கிறார்கள்.
நகைக்கடை மற்றும் பாத்திரக்கடையின் பின்புறம் மறுசீரப்பு பணிகளை செய்வதற்கான அனுமதியை பெறுவதற்காக மட்டுமே 50 சுவீட்பாக்ஸ் பேரம் பேசி முப்பதில் முடிந்ததாம்.
மலைக்கோட்டை நகரிலும் தலைநகரிலும் துணிக்கடை வைத்திருக்கும் அந்த தொழிலதிபர் புதிய நகைக்கடை திறப்பதற்கான அனுமதியை பெறுவதற்கு 15 சுவீட்பாக்ஸ் பேசி ஏற்கனவே அந்த தங்கநகைக்காரர் மூலம் பேரம் பேசினார்கள். அழைப்பில் எல்லோருக்கும் கொடுத்த பிறகும் மீண்டும் டார்ச்சர் பண்ணி 10 சுவீட்பாக்ஸ் வாங்கினார்களாம்.
எதிர்கட்சியாக இருந்தாலும் பசையுள்ள பதவியில் இருக்கும் அண்ணனும் தம்பியும் சேர்ந்து வணிக வீதியை வைத்தே கல்லா கட்டி வருவதாக புலம்புகிறார்கள்.
எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளும்கட்சியின் மெயின் அமைச்சரின் ஆதரவில் தான் இவ்வளவு துணிச்சலாக வசூல் வேட்டையில் ஈடுபடுகிறார்கள் என்கிறார்கள் லோக்கல் ஆளும்கட்சி பிரமுகர்கள்.