திருச்சியில் எழுத்தாற்றல் மற்றும் தொடர்பியல் பயிலரங்கம்!
திருச்சியில் எழுத்தாற்றல் மற்றும் தொடர்பியல் பயிலரங்கம்!
இளம் எழுத்தாளர்களை பயிற்றுவித்து உருவாக்கும் வகையில், எழுத்தாற்றல் மற்றும் தொடர்பியல் பயிலரங்கை திருச்சிராப்பள்ளி தமிழ் இலக்கியக் கழகமும் தனிநாயகம் இதழியல் கல்லூரியும் இணைந்து நடத்தின.
3 நாள் நிகழ்வாக நடைபெற்ற இப்பயிலரங்கில், பல்வேறு தளங்களில் இயங்கும் தமிழ்ச்செல்வன், முனைவர் பாலின் ப்ரீத்தாஜெபசெல்வி, இரா.தமிழ்தாசன், தோழர் தமிழ்பித்தன், தோழர் திருவைக்குமரன், அமிர்தா, இயக்குநர் மௌரி, தோழர் பாட்டாளி ,நந்தவனம் சந்திரசேகரன் உள்ளிட்ட ஆளுமைகள் பங்கேற்று பயிற்சி வகுப்புகளை நடத்தினர்.
தமிழ் இலக்கிய கழகத்தின் அருள் முனைவர் ஆ.ஜோசப், சே.ச.மற்றும் திருச்சி புனிதவளனார் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் ஜா.சலேத் ஆகியோரின் முன்னெ டுப்பில் நடை பெற்ற இப்பயிலரங்கில், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
இறுதிநாள் நிகழ்வில், ”பத்திரிகையாளர் அனுபவமும், நுட்பமும்” என்ற தலைப்பில், அங்குசம் இதழின் நிர்வாக ஆசிரியர் ஜெ.டி.ஆர். பங்கேற்று பத்திரிகையாளனாக கால் நூற்றாண்டு காலம் கடந்து வந்த பாதையை மாணவர்களோடு கலந்துரையாடினார்.
– அங்குசம் செய்திப் பிரிவு