மினிஸ்டர் எங்கேய்யா போறாரு… கண்டுபிடித்த உளவுத்துறை

0

மினிஸ்டர் எங்கேய்யா போறாரு… கண்டுபிடித்த உளவுத்துறை

மல்கோவா மாவட்டத்திற்கென அமைச்சர் இல்லை. சமீபத்தில் நடைப்பெற்ற அரசு நிகழ்ச்சிக்கு அந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் கலந்துக் கொண்டார். காலையில் இருந்து நிகழ்ச்சிகளெல்லாம் முடித்து விட்டு அங்குள்ள விருந்தினர் மாளிகைக்கு ஒய்வுக்கு சென்றார்.

அவரை பார்க்க அதிகாரிகளும், கட்சி நிர்வாகிகளும் வெளியில் காத்தி ருந்த நிலையில், அவர் திடீரென தனது உதவியாளரையும், மாவட்டத்தின் நிழல் அமைச்சராக வலம் வந்து கொண்டிருப்பவரையும் மட்டும் கூட்டிக்கொண்டு வேறொரு காரில் ஏறிக்கொண்டு தன்னை யாரும் பின் தொடர வேண்டாம், எஸ்கார்ட் போலீஸையும் வர வேண்டாம் என்று
சொல்லிவிட்டு சென்றுள்ளார்.

அவரது தம்பி மரணம் குறித்த விசாரணை விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில் பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்ட போலீஸாரும், உளவுத்துறை போலீஸாரும் அமைச்சர் சொல்லாமல் கொள்ளாமல் எங்கு செல்கிறார் என்று புலம்ப ஆரம்பித்து விட்டனர். பின்னர் சரியாக அரை மணிநேரம் கழித்து அமைச்சர் விருந்தினர் மாளிகைக்கு வந்த பின்பு தான் அனைத்து அதிகாரிகளுக்கும் மூச்சே வந்ததாம். இதுபோன்று அமைச்சர் சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு வந்தால் அடிக்கடி எஸ்கேப் ஆகிறாராம்.

எங்கே போகிறார் என்று மாவட்டத்தில் உள்ள எந்த அதிகாரிகளுக்கும் தெரியவில்லை இதுகுறித்து உளவுத்துறை போலீசார் விசாரித்ததில் அமைச்சர் கால்வலிக்காக அதே பகுதியில் ஊர் பெயர் கொண்ட ஒரு கட்சிக்காரரின் ரிசார்ட்டிற்கு சிகிச்சைக்காக சென்றுவருவது தெரியவந்துள்ளது.

– மிஸ்டர் ஜி

 

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.