அதிக வட்டியுடன் பணம் தருவதாக மோசடி – சேலம் நிதி நிறுவன அதிபரின் மகன் கைது !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அதிக வட்டியுடன் பணம் தருவதாக மோசடியில் ஈடுபட்ட சேலம் நிதி நிறுவன அதிபரின் மகன் திடீர் கைது.

சேலம் மாவட்டம் ரெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவர் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே ஜஸ்ட்வின் ஐ.டி. டெக்னாலஜி இந்தியா என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். அந்த நிறுவனத்தில் நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் ரூ.18 ஆயிரம் வீதம் ஒரு வருடத்தில் ரூ. 2.16 லட்சம் வழங்கப்படும் என கவர்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

அதனை நம்பி சேலம், திருச்சி, கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் சேர்ந்தனர். தொடக்கத்தில் அவர் கூறியபடியே அதிக வட்டியு டன் கூடிய கவர்ச்சி திட்டத்தை உறுப்பினர் களுக்கு கொடுத்து வந்தார்.

அதனைத் தொடர்ந்து மேலும் ஆயிரக்கணக்கான நபர்கள் உறுப்பினராக இணைந்து முதலீடு செய்தனர்.இந்த நிலையில் பாலசுப்பிரமணி தனது உறுப்பினர்கள் யாருக்கும் பணத்தை வழங்கவில்லை என்று புகார் எழுந்தது. இதே போல் வேலூர் மாவட்டத்திலும் அவர் மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

வேலூர், காட்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, பாலசுப்பிர மணியனிடம் பணம் கட்டி ஏமாற்றம் அடைந்த பலர் சேலம் வந்து பாலசுப்பிர மணியை பிடித்து போலீசில் ஒப்படைக்க சென்றபோது அடியாட்கள் வந்து மிரட்டி முதலீடு செய்தவர்களை கடுமையாக தாக்கி பாலசுப்ரமணியை அழைத்து சென்று விட்டனர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இது குறித்து சேலம் அழகாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. முதலீட்டாளர்கள் இவர் மீது சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் பண மோசடி புகார் அளித்தனர்.

வினோத் குமார்
வினோத் குமார்

இது குறித்து விசாரணை மேற்கொண்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பாலசுப்ர மணியம், அவரது மகன் வினோத் குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே போலீசார் பாலசுப்பிரமணியத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவரது மகன் தலைமறைவானார். இதை தொடர்ந்து ஆய்வாளர் முத்தமிழ்ச்செல்வன் தலைமையில் போலீசார் தலைமறைவான வினோத்குமாரை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று வினோத்குமாரை போலீசார் கைது செய்தனர்.

பின்பு அவரை கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.