குளித்தலையில் பள்ளி மாணவி ரயிலில் அடிபட்டு பலி!

0

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ராஜேந்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயக் கூலி தொழிலாளி லெனின் (எ) செந்தமிழ் செல்வன் இவருக்கு
ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகள் கனிமொழி வயது 15. இவர் திருச்சி உறையூர் பகுதி அரவானூரில் உள்ள தனது மாமா வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக தங்கி, உறையூரில் உள்ள சிஎஸ்ஐ மெதடீஸ் பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து முடித்து, பள்ளி விடுமுறை என்பதால் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கனிமொழியின் தந்தை செந்தமிழ் செல்வன் அரவானூர் சென்று மகளை ராஜேந்திரம் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.


இந்நிலையில் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் சென்னையில் இருந்து மங்களூர் செல்லும் அதிவிரைவு ரயிலில் அடிபட்டு சுடலமாக கிடந்தார்.
சம்பவம் குறித்து ராஜேந்திரம் ரயில்வே கேட்டில் இரவு பணியில் இருந்த ரயில்வே ஊழியர் ரோஷன் என்பவர் திருச்சி ரயில்வே காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன், ஏட்டு சித்ரா மற்றும் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது பள்ளிச் சிறுமி ரயில் தண்டவாளத்தை கடந்து இயற்கை உபாதை கழிக்க சென்றதாக கூறினர்.
சடலத்தை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்விற்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவியின் இறப்பு சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

-நௌசாத்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.