அண்ணாமலைக்கு சில “அட்வைஸ்”கள் அல்ல…!!!???
அண்ணாமலைக்கு
சில “அட்வைஸ்”கள்
அல்ல…!!!???
@@@@@@@@@@@@@@
ஒரே நேரத்தில்
தமிழக அரசியலில்
இரண்டு விக்கெட்டுகள்
வீழ்ந்து விட்டன.
ஒன்று,
திமுக விக்கெட்
முன்னாள் மாநில நிதியமைச்சர்
பி.டி.ஆர்.
தமிழக பாஜகவின்
அண்ணாமலை உபயமான ஆடியோ வீடியோவினால்…
நிதியமைச்சர்
பதவியில் இருந்து
வேறு துறைக்கு
மாற்றப்பட்டார்
பி.டி.ஆர்.
மற்றொன்று,
கர்நாடக மாநிலத்
தேர்தல் முடிவுகளினால்…
இயல்பாக வீழ்ந்த
விக்கெட் தமிழக
பாஜகவின்
அண்ணாமலை.
கர்நாடகாவில்
மட்டும் இந்நேரம்
பாஜக. வெற்றி
பெற்றிருந்தால்
தமிழ்நாட்டில்
அந்தக் கட்சியினரின்
அட்டகாசமான கொணடாட்டங்களும்
அவ்வளவு ஏன்???
அண்ணாமலையின்
அடாவடியான துள்ளல் பேச்சுகளும்
திமுக மீதான
எள்ளல் ஏச்சுகளும்
எல்லை மீறிப்
போயிருக்கும்.
அரசியலில்
இதெல்லாம்
இயல்பு தான்.
இவைகள் எது குறித்தும் அண்ணாமலை துவண்டு விட
வேண்டாம்.
தமிழகத்தில்
முன்பிருந்த
பாஜகவுக்கும்
இப்போதிருக்கும்
பாஜகவுக்கும்
அமைப்பு ரீதியாக
ஏறு முகம் தான்.
முன்பு நகரங்களில்
மட்டுமே எப்போதாவது பறந்து கொண்டிருந்த
தாமரை கொடியானது
இப்போது
கிராமங்களில்
கூட மலர்ந்து
பறந்து கொண்டிருக்கிறது.
ஆளும் திமுக
கவனத்தில்
கொண்டிராத
தமிழக பாஜகவின்
வளர்ச்சி இது.
ஆம்.
தமிழக பாஜகவில்
மழலையர் பிரிவு
மட்டும் தான்
தொடங்கவில்லை.
கட்சி அமைப்புக்குள்
அத்தனை அத்தனை
பிரிவுகள்.
தமிழக கமலாலயத்தில்
“முதிர்” தென்றல்களை
முட்டித் தள்ளி விட்டு
“இளம்” புயலென
உள்ளே பாய்ந்த
அண்ணாமலை தான்
தமிழக பாஜகவின்
மறைமுகமான
வளர்ச்சிகள்
அத்தனைக்கும்
காரணம்.
இப்போதும் ஏதும்
மோசமில்லை.
அண்ணாமலையின்
அடாவடி பேச்சுகள்
குறைத்து அதனை
தமிழக மக்கள் நலன் சார்ந்து மடை மாற்றினால் மட்டுமே
போதும்.
எளிய மக்களின்
மனங்களில் மிக
இலகுவாக இடம்
பிடிக்கலாம்.
மாறாக தனக்கு எதிரணியில்
உள்ளவர்களை
“எதிரிகளாக” பாவித்து தொடர் தாக்குதல் நடத்தினால்…
அண்ணாமலையின்
வீரியம் காரியம்
அனைத்துமே வீண்
விரையமாகப்
போய் விடும்.
இல்லையேல்
களத்திலே
செயலூக்கம் நிறைந்த
ஒரு இளம் அரசியல்வாதியைத் தமிழகம் இழந்து விடும்.
ஒரு நாணயத்தின்
இரண்டு பக்கங்கள்
என்பது தான்
ஆளும் தரப்பும்
எதிர் தரப்பும்.
நாணயத்தின் அந்த
உங்கள் பக்கத்தினை
அவ்வப்போது உங்களிடமிருந்து
வெளிப்படும்
வார்த்தைச்
சர வெடிகளால்
வலுவிழக்கச்
செய்து விடுகிறீர்கள்.
உங்கள் முன்பாக
அரசியல் எதிர்பார்ப்பு
நல் விதைகள் தூவி
விடப்பட்டுள்ளன.
பரபரப்பு…
அதீத மீடியா வெளிச்சம்… போன்ற
மாயச் சுழல்களில்
அடிக்கடி சிக்கிக்
கொள்கிறீர்கள்.
அவைகளைத்
தவிர்த்து வெளியே
வாருங்கள்.
பாஜகவின்
இந்துத்துவம் வெளிப்பாடு
தவிர்த்து…
தமிழகம்
உங்களிடம் நிறைய
“வேறு… வேறு…” எதிர்பார்க்கிறது.
“மனிதத்துவமே”
மகத்தானது.
வாழ்த்துகள்…
மிஸ்டர்
அண்ணாமலை.
ஸ்ரீரங்கம்
திருநாவுக்கரசு,
உழைக்கும் மூத்த
இதழியலாளர்.