ஸ்ரீரங்கம் கொள்ளிட ஆற்றின் சுழலில் சிக்கிய 4 ஸ்ரீமான் குருக்குல மாணவர்கள் – ஒருவர் மரணம் ! பதட்டம் !
ஸ்ரீரங்கம் கொள்ளிட ஆற்றின் சுழலில் சிக்கிய 4 ஸ்ரீமான் குருக்குல மாணவர்கள் – ஒருவர் மரணம் ! பதட்டம் !
இன்று 14/05/23 விடியற்காலை ஸ்ரீரங்கம் வேதபாட சாலையில் பயிலும் மாணவர்கள் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற 4 பேர் ஆற்றின் சுழலில் சிக்கிய சம்பம் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீரங்கம் கோவில் ஸ்தலாத்தர்களில் முக்கிய நபரான ஆடிட்டர் பத்திரி பட்டர் என்பவர் ஸ்ரீமான் குருக்குலம் வேதபாடசாலையில் முக்கிய பொறுப்ப வகிக்கிறார். இந்த குருக்குல பள்ளியில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து மாணவர்கள் தங்கி படிக்கிறார்கள். இங்கும் படிக்கும் மாணவர்களுக்கு Pre Primary Montessori Education -EPL, Sensorial, Arithmetic, Language(Tamil, English, Sanskrit) Early Primary Maths, Physics, Chemistry, Biology, History, Geopgraphy and Language(Tamil, English, Sanskrit) ஆகிய வகுப்புகள் நடத்தப்படுகிறது.
இதில் மன்னார்குடி பகுதியில் இருந்து தங்கி படிக்கும் படிக்கும் மாணவர்களில் 4 பேர்.. ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் யாத்திரி நிவாஸ் எதிரில் கொள்ளிடம் ஆற்றில் நடுவில் ஒடும் தண்ணீரில் குளிக்க சென்ற போது பேர் அதன் சுழலில் மன்னார்குடியை சேர்ந்த விஷ்ணுபிரசாத் வயது 13, இவர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். ஒரு மாணவர் காப்பாற்றப்பட்டார், மாயமான இரண்டு மாணவர்களை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஸ்ரீரங்கம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஸ்ரீமான் குருக்குலத்தின் இணைதளத்தில் உள்ள தொடர்பு எண்ணில் நாம் தொடர்பு கொண்டு இந்த சம்பவம் குறித்து பேசிய போது… எங்களுக்கு எந்த தகவலும் இல்லை, நாங்கள் விடுமுறைக்கு வெளியூர் வந்திருக்கிறோம், இது குறித்து இனி தான் விசாரிக்கனும் என்றார்.
அதிகாலை 6 மணிக்கே யாருடைய துணையும் இல்லாமல் தனியாக 4 மாணவர்கள் குளிக்க சென்று இருக்கிறார்கள். அப்போது சுழலில் சிக்கி இருக்கிறார்கள், ஆனால் 7 மணிக்கு மேல தான் போலிசுக்கே தகவல் கிடைத்திருக்கிறது, அதன் பிறகே போலிசார் தேடும் படலத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இது குறித்து ஸ்ரீரங்கம் போலிசார் விசாரித்து வருகிறார்கள்..