”சன் டிவி பெயரைப் பயன்படுத்தி 1.50 கோடி மோசடி செய்த பத்திரிகையாளர்”!
”சன் டிவி பெயரைப் பயன்படுத்தி 1.50 கோடி மோசடி செய்த பத்திரிகையாளர்”!
சன் டிவி-யின் செல்வாக்கைப் பயன்படுத்தி வருமான வரித்துறையில் நடைபெற்று வரும் வழக்கை விரைந்து முடித்துத் தருவதாகக் கூறி ரூ.1.50 கோடி சன் டிவி செய்தியாளர் மோசடி செய்துள்ளதாக மாநில அளவில் புகழ் பெற்று 2100 மருத்துவர்களையும், 5000 பொறியாளர்களையும் உருவாக்கிய ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனர் கல்வியாளர் வி.சந்திரசேகரன் கொடுத்துள்ள புகார் மனுவால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக விசாரித்தபோது, 2016 தேர்தல் சமயத்தில் ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனத்தில் பள்ளி மற்றும் கல்லூரி ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்க வைக்கப்பட்டு இருந்த 2.70 கோடி ரூபாய் பணத்தை வருமான வரித்துறை கைப்பற்றியது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனத்தில் சன் டி.வி யின் செய்தியாளர் மற்றும் அரசாங்க காரியங்கள் செய்து தரும் புரோக்கராக அறிமுகமானவர் பாபு. இவர் வருமான வரித்துறையில் நிலுவையில் உள்ள வழக்கை சன் டிவி செல்வாக்கைப் பயன்படுத்தி வழக்கை விரைந்து முடித்துத் தருவதாகவும், இதற்காக வருமான வரித்துறை அரசு வழக்கறிஞர் பாஸ்கரிடம் தான் பேசிவிட்டதாகவும், குறிப்பிட்ட ஒரு தொகை கொடுத்தால் போதும் என்று சன் டிவி செய்தியாளர் பாபு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனர் கல்வியாளர் வி.சந்திரசேகரன் வயது 76 கடந்தவர், உடல் அறுவை சிகிச்சையால் 10 அடி கூட சுயமாக எழுந்து நடக்க முடியாமல் இருக்கும் காரணத்தல், பாப-வுன் கடந்த காலங்களில் அரசாங்க காரியங்களை புரோக்கராக செயல்பட்டுச் சிறப்பாக முடித்துக் கொடுத்ததால் இதையும் நம்பிய கல்வியாளர் சந்திரசேகரன் பல்வேறு கட்டங்களாக ரூ.1.50கோடி ரூபாயை பாபுவிடம் கொடுத்துள்ளார்.
இந்த சிக்கலான வழக்கை விரைந்து முடிக்கவேண்டும் என்றால் மேலும் ஒரு கோடி தேவை என்று கூறவ, அதிர்ந்து போன கல்வியாளர் சந்திரசேகரன் பாபு-வின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து வழக்கு குறித்த விவரங்களைக் கேட்டுள்ளார். ஆனால் பாபு முன்னுக்குப் பின் முரணாக அப்போதைய நிலை குறித்து பதில் அளிக்காமல் தவறான பதில் அளிக்கவே பாபு மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
ஊத்தங்கரை டிஎஸ்பி அமலாஅட்வின் இன்று காலை 10 மணிக்கு 22/05/2023 பாபு-வை விசாரணைக்கு ஆஜராகும்படி காவல்துறை அழைப்பாணை (சம்மன்) அனுப்பி உள்ளார்.
பாபுவின் கருத்தை அறிய தொடர்பு கொண்டோம் செல்போன் சுவிச்ஆப் செய்யப்பட்டு இருந்தது, ஆனால் பாபு கிருஷ்ணகிரி செய்தியாளர் குழு மற்றும் வாட்ஸ்அப்பில் கல்வியாளர் சந்திரசேகரனுக்கு எதிராக பகிர்ந்த தகவல் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
• வித்யா மந்திர் தாளாளர் தரை குறைவான செயல்
(பத்திரிகையாளர்களைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக தரை குறைவாக மிகவும் கொச்சைப்படுத்திப் பேசி வரும் ஊத்தங்கரை வித்யா மந்திரி கல்வி நிறுவனர் சந்திரசேகரன் அவர்கள் இன்று பத்திரிகையாளர்களை வைத்து காரியம் சாதிக்க நினைக்கிறார் தயவு செய்து கிருஷ்ணகிரி பத்திரிகையாளர்கள் யாரும் அவர் ஆசை வார்த்தை நம்பி ஏமாற வேண்டாம் கடந்த பல ஆண்டுகளாக கிருஷ்ணகிரி பத்திரிகையாளர் மற்றும் ஊத்தங்கரை பத்திரிகையாளர்களை மிகவும் கொச்சைப்படுத்திப் பரவலாகப் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இவர் பள்ளிக்கூடம் நடத்துகிறாரா இல்லை பைனான்ஸ் கம்பெனி நடத்துகிறார் நடந்துவரும் இன்கம் டேக்ஸ் கேஸிலிருந்து தப்பித்து கொள்ளக் கணக்கில் வராத 14 கோடி ரூபாயைக் கடன் கொடுத்ததாகக் கூறி புகார் மனு அளிக்க வந்துள்ளார்.
இவர் பத்திரிகையாளரை தரும் தாழ்த்திப் பேசி வருகிறார் என்பதற்குப் பல ஆதாரங்கள் உண்டு)
இந்த குற்றசாட்டுகளை அடுத்து, சன் டிவி நிறுவனம் பாபு விடம் விளக்கம் கேட்கவே , நான் தற்போது குடும்ப சூழ்நிலை காரணமாக நேரில் வர முடியாத சூழ்நிலை உள்ளேன். வேண்டும் என்றால் நான் சன் டிவி செய்தியாளர் பணியை ராஜினமான செய்துவிடுகிறேன் என்றும் ஐடி கார்டு அருகாமையில் உள்ள சன் டிவி செய்தியாளரிடம் கொடுத்து விடுவதாக தெரிவித்துள்ளார்.
பல ஆண்டு காலமாக சன் டிவி செய்தியாளராக பாபு தன்னை அடையாளப்படுத்தி கொண்டாலும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் சன் டிவி நிறுவனம் ஐடி கார்டு வழங்கியுள்ளது. அப்படியானால் பாபு-வின் கைவரிசை கோட்டை வரை எப்படி எல்லாம் விளையாடி இருக்கும் என்று காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றது.
-மு.வடிவேல்