இருவரின் சாவுக்கு காரணம் சயனைடு கலந்த மதுவா ?

0

இருவரின் சாவுக்கு காரணம் சயனைடு கலந்த மதுவா?

தஞ்சாவூர் கீழவாசல் கொண்டிராஜபுரம் பகுதியில் தற்காலிக மீன் மார்க்கெட் எதிரே செயல்பட்டுவரும் டாஸ்மாக் கடை திறக்கப்படுவதற்கு முன்பே அதையொட்டி அமைந்துள்ள அரசு உரிமம் பெற்ற மது பாரில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் மது வாங்கி குடித்த குப்புசாமி (வயது 68), குட்டி விவேக் (வயது 36) ஆகிய 2 பேர் உயிரிழந்தனர்.

https://businesstrichy.com/the-royal-mahal/


இச்சம்பவம் தொடர்பாக தஞ்சை நகர கிழக்கு காவல்நிலைய போலீஸார் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 174ன் கீழ் ‘சந்தேக மரணம்’ என வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அவ்விருவரும் டாஸ்மாக் மது குடித்ததால் இறந்தனரா அல்லது போலி மது குடித்ததால் இறந்தனரா என்ற சந்தேகம் எழுந்தது.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

இதையடுத்து, உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறாய்வு செய்யப்பட்டன. மேலும் தடய அறிவியல் பரிசோதனைக்காக உயிரிழந்தவர்களின் உடல் உறுப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன.

மேற்படி மது அருந்தும் கூடத்தை தஞ்சாவூர் வருவாய்க் கோட்டாட்சியர் (பொறுப்பு) பழனிவேல் முன்னிலையில் காவல்துறையினர் அவசர அவசரமாக பூட்டி ‘சீல்’ வைத்தனர்.


இந்நிலையில், உயிரிழந்த அவ்விருவரின் உடலிலும் சயனைடு கலக்கப்பட்டிருப்பது தடய அறிவியல் பரிசோதனையில் தெரியவந்துள்ளது என்றும், அவ்விருவரும் தற்கொiலை செய்து கொண்டனரா அல்லது கொலை செய்யப்பட்டனரா என்பது போலீஸ் விசாரணைக்கு பின்னரே தெரிய வரும் என்றும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உடனிருந்தார். இதுதான் தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கலப்பட சரக்கு விற்பனை செய்த அரசியல் செல்வாக்கு படைத்த கும்பலைக் காப்பாற்ற அரசும் அரசு அதிகாரிகளும் முயல்கின்றனரோ என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம், மது குடித்த இருவரும் வெவ்வேறு நேரத்தில் இறந்துள்ளனர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

“சயனைடு விஷம் சாப்பிட்ட நபர் உடனடியாக ஒருசில நொடிகள் அல்லது நிமிடங்களிலேயே இறக்க நேரிடும். அந்த அளவுக்கு அது விஷத்தன்மை கொண்டது. அதனால்தான், எதிரிகளிடம் உயிரோடு மாட்டிவிடக் கூடாது என்பதற்காக விடுதலைப் புலிகள் உள்ளிட்ட போராளிகள் தங்களது கழுத்தில் எப்போதுமே சயனைடு குப்பிகளை மாட்டியிருப்பர்.

சயனடு கலந்து மதுவா
angusam.com – 1 சயனடு கலந்து மதுவா

தற்போது மது அருந்தி இறந்தவர்களில் ஒருவரான குப்புசாமி என்பவர் 68 வயது முதியவர். மீன் வெட்டும் தொழில் செய்து வருபவர். கலெக்டர் கூறியபடி, அவர் ஒருவேளை சயனைடு கலந்த மதுவை சாப்பிட்டிருந்தால், பாரில் இருந்து அவர் எப்படி மீன் மார்க்கெட்டிற்கு சாவகாசமாக நடந்து வந்திருக்க முடியும்?,” என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத மூத்த பத்திரிகையாளர்.

அதேபோல, குப்புசாமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் சுமார் பதினைந்து நிமிடங்கள் கழித்து அதே பாரில் மது குடித்துவிட்டு வெளியே வந்த மற்றொரு நபரான குட்டி விவேக் (வயது 36) பார் வாசலிலேயே மயங்கி விழுந்துள்ளார்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் பிற்பகல் 2.45 மணிக்கு இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மது குடித்து உயிரிழந்த குட்டி விவேக்-கிற்கு குடும்பத்தில் பிரச்சினை இருந்துள்ளதாக தாசில்தாரின் விசாரணை அறிக்கையில் தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளார் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.


யாருக்குதான் குடும்பத்தில் பிரச்சினை இல்லை?. சாதாரண கூலித் தொழிலாளியான குட்டி விவேக் எளிதில் கிடைக்கக் கூடிய பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்க முடியும். ஆனால் அவர் சயனைடு கலந்த மதுவை குடித்து இறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, சயனைடு விஷம் வெளிச் சந்தையில் கிடைக்காது. அப்படியிருக்க, தஞ்சாவூர் போன்ற ஒரு சிறிய நகரில் வசிக்கும் கூலித் தொழிலாளிகளான குப்புசாமி, குட்டி விவேக் ஆகியோருக்கு எப்படி அவ்வளவு எளிதில் கிடைத்தது என்ற கேள்வியும் எழுகிறது.

இக் கேள்விகளுக்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரும், தஞ்சை மாவட்ட காவல்துறையினரும் தான் பதில் சொல்ல வேண்டும். உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்ற அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் இணைந்து உருவாக்கிய ‘திரைக்கதை’ தற்போது காவல்துறையினருக்கு மேலும் இடியாப்பச் சிக்கலை உருவாக்கியுள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.