ரூ2000 தாளை திரும்பப்பெற்றது துக்ளக் தர்பார் ஆட்சி – முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்
ரூ2000 தாளை திரும்பப்பெற்றது துக்ளக் தர்பார் ஆட்சி – முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்
ரூ2000 தாளை திரும்பப்பெற்றது துக்ளக் தர்பார் ஆட்சியை காண்பிக்கிறது.
காரைக்குடியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேட்டி.
ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ராஜீவ் காந்தியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் இவ்வாறு கூறினார்.
மேலும், 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் தாளில் கருப்பு பணத்தை பதுக்க முடியும் என்றால், 2000 ரூபாய் தாளில் கறுப்பு பணத்தை மிகவும் எளிதாக பதுக்க முடியும் என மத்திய அரசுக்கு தெரியாதா?என கேள்வி எழுப்பிய
ப.சிதம்பரம், மீண்டும் ஆயிரம் ரூபாய் தாளை மத்திய அரசு கொண்டு வந்தால் நான் வியப்படைய மாட்டேன் என்றும் கூறினார்.
தான் செய்த தவறை மறைப்பதற்காகத்தான் 2000 ருபாய் தாளை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளதாக தெரிவித்தவர்,
மக்கள் ஏற்றுக் கொள்ளாத ரூபாய் தாளை மத்திய அரசு வெளியிடுவது மிகவும் தவறான செயல்.செய்த தவறை ஒத்துக் கொள்ளாமல் 2000 ரூபாயை திரும்ப பெற்றுள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.
2000 ரூபாய் தாளை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று நாங்கள் சுட்டிக் காட்டியும், மத்திய அரசு அதனை ஏற்றுக்கொள்ளவில்லை , இப்போதாவது மத்திய அரசுக்கு புத்தி வந்து 2000 ரூபாய் தாளை திரும்ப பெற்றதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றவர், முழுக்க முழுக்க சிந்திக்காமலும், யோசிக்காமலும் எடுத்த முடிவை நியாயப்படுத்தும் முயற்சி தான் 2000 ரூபாய் தாளை விலக்கிக் கொண்டது.
செய்த தவறை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் 7 ஆண்டுக்கு பிறகு அதனை திருத்திக் கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.
பாலாஜி